இது எங்கள் நோட்டிஸ் போர்ட்.
ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார்.
எங்கள் தளங்கள்
| ப்ளாக் |
|---|
| அவார்டா கொடுக்கறாங்க? |
| கூட்டாஞ்சோறு |
| சிலிகான் ஷெல்ஃப் |
இந்தத் தளத்தில் இது வரை வந்த கட்டுரைகள் ஆர்வி, பக்ஸ், சேதுராமன், உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் கூட்டு முயற்சி. பிறருடைய நல்ல படைப்புகள் சிலவற்றையும் மீள் பதிவு செய்துள்ளோம்.சேதுராமன் அவர்கள் தற்போது எங்கள் நினைவில் மட்டுமே இருக்கிறார்.
ஆர்வி எழுதிய அம்மாவுக்கு புரியாது சிறுகதை உரையாடல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. போட்டியை நடத்திய பைத்தியக்காரன், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு நன்றிகள்!
பக்சின் மகள் பிருந்தா எழுதிய கவிதை பரிசு பெற்றிருக்கிறது. பரிசு விவரங்கள், இடுகையில்.
மார்ச் 26, 2009 at 5:16 பிற்பகல்
இந்த ஸ்டிக்கி போஸ்ட் ஒரு நல்ல ஐடியா. மேலும் சில தகவல்களை நாம் இதில் சேர்க்கவேண்டும்.
April 8, 2009 at 9:34 பிற்பகல்
#
Vijay Says:
ஏப்ரல் 5, 2009 at 4:59 பிற்பகல் e
Get Well Soon
#
Sethuraman Says:
ஏப்ரல் 8, 2009 at 1:20 மு.பகல் e
wish you a very speedy recovery!
because of a pc malfunction could see this only today.
best wishes
#
வினவு Says:
ஏப்ரல் 8, 2009 at 8:14 பிற்பகல் e
ஆர்.வி.
உங்களைத் தேடி வந்தபோது இந்த தகவல்.
கண் விழித்து பின்னூட்டம் இடாமல் ஓய்வெடுத்து விரைவில் உடல் நலம் அடையுங்கள்
நட்புடன்
வினவு
April 10, 2009 at 4:57 மு.பகல்
விஜய், சேதுராமன், வினவு குழுவினருக்கு,
உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி! உடல் நிலை இப்போது தேறி வருகிறது. கூடிய விரைவில் மீண்டும் படிக்க எழுத ஆரம்பித்துவிடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.
April 8, 2009 at 9:36 பிற்பகல்
இரண்டு ஸ்டிக்கி போஸ்ட்கள் இடத்தை அடைப்பது போல் இருப்பதால் consolidate பண்ணிவிட்டேன். பதில்களையும் சேர்த்துதான்.
April 11, 2009 at 6:35 மு.பகல்
Get well soon…..
April 11, 2009 at 5:04 பிற்பகல்
வாழ்த்துக்களுக்கு நன்றி, நிகில்!
மே 19, 2009 at 5:46 மு.பகல்
லக்ஷ்மி ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. அடுப்படியிலே முடங்கிக்கிடந்த பிராம்மணப்பெண்களைப் படிக்கவைத்தவர் லக்ஷ்மி. – இதுதான் லக்ஷ்மி. இதற்குமேல் ஒன்றும் இல்லை.
ஜூன் 20, 2009 at 8:46 மு.பகல்
Been following your blog for some time, very very interesting.
Quite often you say you grew up in a village, may I know where ?
ஜூன் 21, 2009 at 6:37 மு.பகல்
கிருஷ்ணன்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி!
என் அப்பா ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டராக இருந்தவர். அதனால் நாங்கள் பல கிராமங்களில் இருந்திருக்கிறோம். எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் இருந்த கிராமங்கள் லாடாகரனை எண்டத்தூர், மானாம்பதி. செய்யூர் என்ற சிறு நகரமும் கொஞ்சம் நினைவிருக்கிறது.
நீங்களும் கிராமத்துக்காரரா?
ஜூன் 21, 2009 at 12:00 பிற்பகல்
///லாடாகரனை எண்டத்தூர், மானாம்பதி. செய்யூர்//
இவைல்லாம் எங்கே இருக்கின்றன????????????????????????
ஜூன் 21, 2009 at 12:01 பிற்பகல்
மன்னிக்கவும்!. “
இவையெல்லாம்” என்று படிக்கவும்!
ஜூன் 22, 2009 at 1:31 மு.பகல்
நல்லதந்தி,
மானாம்பதி காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் இன்னொரு சிறிய நகரம் உத்திரமேரூர். லாடாகரனை என்டத்தூரும் உத்திரமேரூருக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் இன்னொரு “பெரிய” நகரம் மதுராந்தகம். எல்லாமே பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தவை. இப்போது எது எந்த மாவட்டத்தில் இருக்கிறது என்று தெரியாது.
வீரபாண்டியன் மனைவி பற்றி பலர் சொல்லி இருக்கிறார்கள், பத்திரிகையாளர் ஞானி உட்பட. யாரையாவது ஊரிலிருந்து கொண்டு வர சொல்ல வேண்டும்.
தமிழ்வாணனை ஹீரோவாக்கி கதைகள் 77-78 வாக்கில் வர ஆரம்பித்தன என்று ஞாபகம். தவறாக இருக்கலாம். அவர் 77-78-இல் மறைந்துவிட்டார் என்றால் நிச்சயம் தவறுதான். ஆனால் அவருக்கு எம்ஜிஆர் அளவுக்கு புகழ் இருந்தது என்பது கொஞ்சம் ஓவராக தெரிகிறது.
எனக்கு நிச்சயமாக அப்படி தோன்றவில்லை.
தேவனின் கதைகளில் எனக்கு மிக பிடித்தது ஸ்ரீமான் சுதர்சனம். வரவுக்குள் செலவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத் தலைவனின் தவிப்பு மிக நன்றாக வந்திருக்கும். மிஸ்டர் வேதாந்தம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
சாதாரணமாக வரும் மறுமொழிகளுக்கு பதில் எழுதிவிடுவேன். ஏதாவது மிஸ் ஆகி இருந்தால் அது என் கவனக் குறைவுதான், மன்னிக்கவும். சில சமயம் ஒரு பதிவுக்கு வரும் பல மறுமொழிகளுக்கு ஒரே பதிலாக எழுதுவது, இல்லை பல பதிவுகளுக்கு ஒரே ஒருவர் எழுதும் மறுமொழிகளுக்கு ஒரே பதிலாக எழுதுவது நடக்கிறது. அது கொஞ்சம் குழப்பலாம்.
சபாஷ் மீனா திருத்தப்படாதது கவனக் குறைவுதான். திருத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன், திருத்திவிடுகிறேன்.
பி.வி.ஆரை பற்றி எண்பதுகளில் என் படிப்பில் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் எழுதிய கதைகள் எதுவும் எனக்கு சரியாக நினைவு வராததால் நிறைய எழுதவில்லை. நான் ஆர்வியின் எழுத்துகளை படித்ததில்லை.
ஜூன் 22, 2009 at 5:57 மு.பகல்
நீங்கள் குறிப்பிட்ட எல்லா கிராமங்களுமே
இன்னமும் காஞ்சி மாவட்டத்துள் தான்
இருக்கின்றன. செய்யூர் பற்றிச் சொல்லி
இருந்தீர்களே, அங்குள்ள கந்தஸ்வாமி
கோயிலைப் பற்றிச் சொல்லவே இல்லையே!
கூகிளில் செய்யூரைச் சொடுக்கினால் இந்தக்
கோயில் பற்றித்தான் வருகிறது. காஞ்சியில்
இருந்தவர், எப்படி காலேஜ் படிப்பிற்கு
சேலம் மாவட்டம் சென்றீர்கள்?
ஜூன் 22, 2009 at 10:38 பிற்பகல்
சேதுராமன் அவர்களே,
செய்யூரிலிருந்து நாங்கள் வெளியேறும்போது எனக்கு ஏழெட்டு வயதிருக்கலாம். அங்கே கந்த சஷ்டி கொண்டாடப்படுவது நினைவிருக்கிறது. (மானம்பதியில் தைப்பூசம் பெரும் விழாவாக கொண்டாடப்படும்.)
நாங்கள் படித்த போதெல்லாம் தனியார் எஞ்சினியரிங் காலேஜ் எதுவும் கிடையாது. சேலம் அரசு காலேஜில் சீட் கிடைத்தது, போனேன். அவ்வளவுதான்.
சக பதிவாளர் பக்சும் அங்கே என்னுடன் படித்த க்ளாஸ்மேட்தான் .
ஜூன் 23, 2009 at 4:24 மு.பகல்
>>>சக பதிவாளர் பக்சும் அங்கே என்னுடன் படித்த க்ளாஸ்மேட்தான்
ஒரே செண்டன்ஸில் இரண்டு பொய்.
1. ”என்னுடன் படித்த” என்பதில் ”நான் படித்தேன்” என்று பொருள்படுகிறது.
2. “பக்சும் அங்கே என்னுடன் படித்த” என்பதில் பக்சும் படித்தான் என்று கூறுவது.
தமாஷிற்குத் தான் எழுதுகிறேன். ஆர்.வி.யின் படிப்பு பலதரப்பட்டது. ஒரு நண்பன் இவன் படித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்து இப்படி கிண்டல் செய்தான்:
“எதை படிக்கிறது என்று ஒரு வரைமுறையே கிடையாதாடா? மனுஷன் படிப்பானாடா இந்த் புத்தகத்தை?”
அந்த புத்தகத்தின் தலைப்பு:
“பாம்பு சட்டையை கழற்றுவது எதனால்?”
ஜூன் 23, 2009 at 6:50 மு.பகல்
பக்ஸ்,
எனக்கே இந்த மாதிரி ஒரு புஸ்தகம் படித்தது ஞாபகம் இல்லையே, உனக்கு எப்படி?
ஜூலை 8, 2009 at 6:03 மு.பகல்
அன்பு RV
சென்னையில் பிறந்து சென்னையில் வாழ்கிறேன். கிராமங்கள் மேல் ஒரு தீரா மோகம்
செப்டம்பர் 2, 2009 at 8:29 மு.பகல்
இன்று ஹிந்து மெட்ரோப்ளஸ் இதழில் ஒரு பழைய புகைப்படம் சென்னை பற்றிய கட்டுரையுடன் வந்திருந்தது. இப்படம் எனக்கு பழைய ஞாபகங்களை நினைவுக்குக் கொணர்ந்தது.. மௌண்ட் ரோடும் ஜெனரல் பாட்டர்ஸ் ரோடும் சந்திப்பும், அடிசன் ஹிக்கின்போதம்ஸ் கட்டிடத்திலிருந்து இப்போது தூன் பில்டிங்க்ஸ் இருக்கும் வரை உண்டான பகுதி… இது எந்த வருஷம் எடுத்தது
என்று பார்க்கும்போது, வலது மூலையிலுள்ள வெல்லிங்க்டன் தியேட்டரில்
அப்போது நடை பெற்றுக் கொண்டிருந்த சினிமாவின் பானர் தெரிந்தது —
சினிமா பெயர் “இரும்புத் திரை” – எந்த வருஷம் வந்தது என்று பார்க்கச் சொடுக்கினவுடன், திரையில் “அவார்டா கொடுக்கிறாங்க” தளம் தென்பட்டது.
வலைத் தேடலில் ஈடுபட்டவனுக்கு, இப்படம் 1960 பொங்கலன்று வெளியடப்
பட்டது என்று தெரிந்தது.
சிவாஜி கணேசன் “எனது சுயசரிதை”யில் இப்படத்தைப் பற்றிக் கூறுவதாவது:
இதே காலகட்டத்தில் ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்காக ஒரு
படம் பண்ணினேன். தொழிலாளர்கள் பிரச்சினையை மையமாக வைத்து
அமைக்கப்பட்ட கதை. அந்தப் படம் தான் “இரும்புத் திரை”. அதில்
வைஜெயந்திமாலா அவர்கள் என்னுடன் கதா நாயகியாக நடித்தார்கள்.
“சந்திரலேகா” போன்ற பிரம்மாண்டமான படங்களை எடுத்தவரல்லவா
எஸ்.எஸ்.வாசன்! அவருடைய ஜெமினி பானரில் நடித்தது பெருமையல்லவா
மார்ச் 14, 2010 at 4:09 பிற்பகல்
Cette liste est vraiment sympa pour les concepteurs et les acheteurs:)
மார்ச் 14, 2010 at 8:08 பிற்பகல்
ஜோசஃப், எங்களுக்கு தமிழில் சொன்னாலே சில சமயம் புரிவதில்லை. நீங்கள் ஃ பிரெஞ்சில் எழுதுகிறீர்களே! டோண்டு, நீங்கள் மொழி பெயர்த்தால்தான் உண்டு!
மார்ச் 15, 2010 at 7:35 பிற்பகல்
Google says – Cette liste est vraiment sympa pour les concepteurs et les acheteurs என்றால் “This list is really nice for designers and buyers”
என்ன தான் சொல்லவருகிறார் Joseph?
April 6, 2010 at 7:26 மு.பகல்
Die Helden sollten sich Cirie gestimmt. Sie ist nicht die stärkste Herausforderung, aber sie ist ein Spiel-Player. Wenn sie nicht loswerden, sie bald werden sie es bereuen.