நான் புரிந்து கொண்ட வரை கீழே எழுதி இருக்கிறேன். ஏதாவது சரி இல்லை என்றால் சொல்லுங்கள்.
1. ஒரு காலத்தில் தமிழகத்தில் – இல்லை இந்தியாவிலேயோ? – பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இருந்தது.
2. மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள் (மத்திய ஆசியா என்றால் இன்றைய உஸ்பெகிஸ்தான், டாட்ஜிகிஸ்தான், கசாகிஸ்தான் போன்ற நாடுகள்)
3. அவர்கள் வர்ணம், ஜாதி, பிறப்பினால் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை இந்தியாவில் நுழைத்தார்கள்.
4. ஒரிஜினல் இந்தியர்களுடன் இனக் கலப்பு நடந்தது. ஆனால் இந்த இனக் கலப்பு தென் இந்தியாவில் மிக குறைவு. முக்கியமாக தமிழகத்தில் இன்னும் ஒரிஜினல் இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
5. ஆரியர்களின் பூசாரி வர்க்கமான பிராமணர்கள் மெதுவாக தமிழகத்துக்கு வந்தார்கள்.
6. இவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லாதவர்கள். பல நூறாண்டுகளுக்கு பிறகும் தமிழகத்தில் 3%தான் இருக்கிறார்கள்.
7. இவர்கள் படை திரட்டிக்கொண்டு வந்து தமிழகத்தை வெல்லவில்லை.
8. இவர்கள் பெரிய விஞ்ஞானிகளும் அல்லர். இவர்கள் வந்து விவசாயம், தொழில், போர் முறை எதையும் முன்னேற்றவில்லை.
9. ஆனால் இவர்கள் சொல்வதை எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள். திடீரென்று இங்கே நுழைந்து ராஜாவைத் தவிர மற்றவரெல்லாம் சூத்திரன், தாழந்தவன், இவர்கள் சந்ததியினர் எல்லாரும் கிட்டத்தட்ட அடிமைகள் என்று சொன்னதை அத்தனை பேரும் ஒத்துக்கொண்டார்கள்.
இது இந்தியா முழுதும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. வட இந்தியாவிலும், மற்ற திராவிட மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் இவ்வளவு பிராமண எதிர்ப்பு கிடையாது. அதனால் அங்கே எல்லாம் இந்த வரலாற்றில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
அதாவது 97 பேர் உள்ள ஒரு ஊருக்கு 3 பேர் வந்தார்கள். இந்த 3 பேரிடம் படை இல்லை, ஆயுதம் இல்லை. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை. வாழ்க்கைக்கு உபயோகமான அறிவு பலம் இல்லை. திடீரென்று ஒரு ஊருக்கு வருவார்களாம். ஏறக்குறைய அத்தனை பேரும் எனக்கு அடிமை என்பார்களாம். எல்லாரும் “தங்கள் சித்தம் என் பாக்யம்” என்பார்களாம். இந்த ட்ரிக் தெரிந்திருந்தால் அலெக்சாண்டர், சீசர், ஜெங்கிஸ் கான், முஹம்மத் கஜினி, தில்லி சுல்தான்கள், ராஜ ராஜ சோழன், பாபர், வெள்ளைக்காரர்கள், நெப்போலியன், ராஜ பக்ஷே, பிரபாகரன் எல்லாரும் உலகத்தையே வென்றிருக்கலாம்.
இல்லை என்றால் இப்படியா? ஆரியர்கள் படை எடுத்து வந்து தமிழகத்தை வென்றார்கள். பிறகு திரும்பி போய்விட்டார்கள். போகும்போது சில பூசாரிகளிடம் நீங்கள் இனி மேல் எல்லாரிடமும் நீங்கள் உயர்ந்தவர், மற்றவரெல்லாம் தாழ்ந்தவர் என்று சொல்லுங்கள், எல்லாரும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவார்கள், உங்களுக்கு அவர்களை அடக்கி வைக்க படை, ஆயுதம், பணம், பதவி ஒரு மண்ணும் தேவை இல்லை, சரித்திரத்தில் இந்த படைஎடுப்பு, ஆரியர்களின் வெற்றி எதையும் எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி போய்விட்டார்கள்.
என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன், சில சமயம் கிருஸ்துவ பிரசாரகர்கள் தெரு மூலையில் நின்று கொண்டு “பாவிகளே” என்று கூப்பிடுவார்கள். உடனே பத்து பேர் பாவி என்றால் நான்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காத குறையாக அங்கே போய் நிற்பார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது.
கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மூளை எங்கே போயிற்று? எதற்காக இதை எல்லாம் ஒத்துக்கொண்டார்கள்?
ஜனவரி 8, 2009 at 10:28 பிற்பகல்
>>>2. மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள் (மத்திய ஆசியா என்றால் இன்றைய உஸ்பெகிஸ்தான், டாட்ஜிகிஸ்தான், கசாகிஸ்தான் போன்ற நாடுகள்)
எனக்கு சிறிது ஐரோப்பாவிலிருந்தும் வந்ததிருக்கவேண்டும் என ஒரு உணர்வு இருக்கிறது.
>>>முக்கியமாக தமிழகத்தில் இன்னும் ஒரிஜினல் இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
திராவிடர்கள் என சொல்லப்படும் வம்சா வழியினரின் உண்மையான நிலம் ஜாவா, சுமத்ரா, மற்ற இந்தோநேசியப் பகுதிகள் என ஒரு நூலில் படித்ததாக ஞாபகம். மேலும் தென்னிந்தியா குறிப்பாக இன்றைய தமிழகப் பகுதிகள் மலைக்குடியினராகிவிட்ட மக்கள் வாழ்ந்த இடம் என்றும் படித்திருக்கிறேன்.
>>>8. இவர்கள் பெரிய விஞ்ஞானிகளும் அல்லர். இவர்கள் வந்து விவசாயம், தொழில், போர் முறை எதையும் முன்னேற்றவில்லை.
எனது தமாஷ் தியரி:
மண்ணின் மைந்தர்களுக்கும், கைபர் கணவாய் வழி வந்த ஆரியர்களுக்கும் ஒரு வித்தியாசம்: இருந்த இடத்தில் விவசாயம் செய்தார்கள் ம. மை.கள். அதனால் அதிகம் வெற்றி அடைய முடியவில்லை. தேவையினாலும், அனுபவத்தினாலும், கொஞசம் மூலையை கசக்கத் தொடங்கினார்கள் ஆரியர்கள். நீர் நிலகளை (நதிகள்) நாடி குடியேறினார்கள். விவசாயம் தன்னிறைவு பெற்றது. மேலும் மூலையை கசக்க நிறைய நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில் மேலும் நீர் நிலகளை கண்டு கொண்டார்கள். (பல ஆரிய கும்பல்களுக்குள் நீர் நிலகளை அடைய போட்டியும் இருந்திருக்கவேண்டும்) இந்த நேரத்தில் உள் பூசலும் வளர்ந்திதிருக்கும். சிலர் செழிப்பான இந்த குடியிருப்புகளிலிருந்து விரட்டப்பட்டிருக்கலாம். அப்படி விரட்டப்பட்ட ஆரியர்கள் திராவிட நாடுகளுக்குச்சென்று ”நான் உங்களுக்கு செழிப்பு வித்தையை கற்றுக் கொடுக்கிறேன். எனக்கு அந்த டெக்னாலஜி தெரியும்” என்று வித்தை காண்பித்திருக்கலாம். (உண்மையாகவும் இருந்திருக்கலாம்). அப்பொழுது பசியில் வாடிய திராவிடர்கள் இந்த வார்த்தைகளை கேட்டு ”ஆஹா இவரல்லவோ தெய்வம்” என்று மயங்கியிருக்கலாம். இந்த வித்தை தெரிந்தவர் சொல்வதெல்லாம் வேத வாக்கு என்ற அடங்கி போயிருக்கலாம். அவர்களை தெய்வமாக்கியிருக்கல்லாம். அவர்களும் அதையே உந்துதலாக எடுத்துக்கொண்டு “நான் வித்தையை கற்றுக் கொடுத்துவிட்டேன். நீங்கள் எல்லாம் போய் வேலை செய்யுங்கள். நான் கடவுளிடம் பேசி வாழும் வழிமுறைகளை எழுதி வைக்கிறேன்” (மோஸஸ் கதை அவருக்கு எப்படி தெரியும் என்பது ஒரு கிளை கதை
) என்று ஹாயாக மரநிழலில் ஊஞ்சல் கட்டிகொண்டு ”வேத சாஸ்திரங்கள்” என்று ஒன்றை ஓலையில் கதைவிட்டுக்கொண்டிருக்கலாம். ”அதன் படி நடக்காவிட்டால் நான் சொல்லிக்கொடுத்த டெக்னாலஜி வேலை செய்யாது” என்று எல்லோரையும் கைக்குள் போட்டிருக்கலாம்.
(Richard Dawkinsஸிடம் பேசிப் பார்த்தால் இன்னும் நிறைய லாஜிக்குடன் கதை சொல்வாரென நினைக்கிறேன்)
>>>என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன், சில சமயம் கிருஸ்துவ பிரசாரகர்கள் தெரு மூலையில் நின்று கொண்டு “பாவிகளே” என்று கூப்பிடுவார்கள். உடனே பத்து பேர் பாவி என்றால் நான்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காத குறையாக அங்கே போய் நிற்பார்கள்.
LOL
ஜனவரி 9, 2009 at 12:50 மு.பகல்
பக்ஸ்,
// எனக்கு சிறிது ஐரோப்பாவிலிருந்தும் வந்ததிருக்கவேண்டும் என ஒரு உணர்வு இருக்கிறது.//
மத்திய ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கும் போனார்கள் என்று சொல்கிறார்கள்.
// இருந்த இடத்தில் விவசாயம் செய்தார்கள் ம. மை.கள். அதனால் அதிகம் வெற்றி அடைய முடியவில்லை. //
ஆரியர்களிடம் குதிரை இருந்ததால் அவர்கள் போரில் வெற்றி அடைந்தார்கள் என்றும் அவர்கள் இங்கிருந்த “திராவிடர்களிடமிருந்துதான்” விவசாயம், தொழில் ஆகியவற்றை நன்றாக கற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.
ஜனவரி 9, 2009 at 1:00 மு.பகல்
நீங்கள் எழுதியதில் சில உண்மைகள் உண்டு
தென்னிந்தியாவிலே தமிழகத்தில் தான் இந்த
பார்ப்பன துவேஷம் தாண்டவமாடுகிறது..
கர்னாடகவிலும், ஆந்திரத்திலும் எங்காவது
கொஞ்சம் இருக்கலாம்.. கேரளத்திலே தமிழ்
நாட்டளவு இல்லையென்றாலும்,ஓரளவுக்கு
இருந்திருக்கும் என்பது கீழே தெரிகிறது
“எலி பன்னி பெருச்சாளி
பட்டரும் வானரம் ததா!
இவ்வைந்தும் இல்லேங்கில்
மலயாளம் மனோஹரம்!!”
என் மலயாளி நண்பர்கள் இதைப்பாடி
என்னைக் கேலி செய்வதுண்டு!
ஜனவரி 9, 2009 at 4:03 பிற்பகல்
கடவுள் என்ற வார்த்தை மிக வலிமையானது. அந்த ஒரு சொல்லை தாங்கி நிற்கும் எந்த மனிதனும் கடவுளை விட ஒரு படி மேலாக போற்றபடுவதை நாம் அறிவோம் . அடிமை தனத்திற்கும் பக்திக்கும் நிறைய வேறுபாடு கிடையாது. நாம் வாழும் இந்த காலத்திலேயே மக்கள் யோசிக்க மறுக்கும்போது 2000 ஆண்டுகள் முன் வாழ்ந்த மக்களை பற்றி சொல்ல என்ன இருக்கிறது.
ஜனவரி 9, 2009 at 4:31 பிற்பகல்
test
ஜனவரி 9, 2009 at 4:33 பிற்பகல்
அட டா அருமையான சப்ஜெக்ட்…
நம்ம இந்த ஒரு பதிவுல மட்டுமே விவாதிச்சா போதும்…
இப்பன்னு பாத்து வேலை அதிகம்…
பட் வில் ஜாயின் யூ சூன்!!!!
ஜனவரி 9, 2009 at 6:31 பிற்பகல்
உங்களின் நக்கல் இந்த பதிவை தூக்கி நிறுத்துகிறது.
ஒன்று பிராமணர்கள் அல்லாத மற்ற சமூகத்தினர் முட்டாள்கள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் பிராமணர்கள் சாமர்த்தியசாலிகள் தான். ஆள் பலமோ, படை பலமோ இல்லாமல் இவ்வாறு எல்லோரையும் ’பிரித்துவிட்டார்களே!’
***
இந்த ஒரிஜினல் இந்தியர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது. திராவிடர்கள் கூட ஆப்பிரக்காவிலிருந்து வந்தவர்கள் என்று மதுரை காமராஜர் பல்கலை நடத்திய ஜீன் ஆராய்ச்சியில் நிறுபனம் ஆகியுள்ளது. மதுரை விருமாண்டி என்பவர் முதல் முதற் மனிதனின் வம்சாவெளி என்றும் அறியப்பட்டுள்ளது!
ஆப்பிரிக்காவில் தான் முதல் மனிதன் பிறந்தான்/உருவானான் என்பதையாது மறுக்க மாட்டார்கள் என்று நம்புவோம்
***
//கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மூளை எங்கே போயிற்று? எதற்காக இதை எல்லாம் ஒத்துக்கொண்டார்கள்?
//
ஆரிய மாயை என்ற நூல் விட்டவர் தமிழகத்தின் முதலமைச்சர் எப்படி ஆனார் என்று நீங்கள் எண்ணி பார்த்தால், உங்களுக்கு விடை கிடைக்கலாம்!
ஜனவரி 9, 2009 at 8:44 பிற்பகல்
testing
ஜனவரி 10, 2009 at 8:03 பிற்பகல்
சேதுராமன் அவர்களே,
மறுமொழிக்கு நன்றி! கேரளத்திலும் பார்ப்பன எதிர்ப்பு உண்டு என்பது என்பது எனக்கு தெரியாத விஷயம். ஆனால் நம்பூதிரிகள் மிக கடுமையான ஜாதி வன்கொடுமைகள் செய்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வரதராஜன் அவர்களே,
உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!
நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எகிப்து, மாயா, இன்கா, பழங்குடிகள் மற்றும் பல நாகரீகங்களில் பூசாரிகளுக்கு முக்கியத்துவம், அதிகாரம் கொடுக்கப்படுவதை பார்க்கலாம். ஆனால் எங்கேயும் மற்றவர்கள் ஏறக்குறைய அடிமைகளாக நடத்தப்பட்டதில்லை. அதுவும் இந்த பூசாரிகள் அந்த நாகரீகங்களின் ஒரு பகுதி. “பிராமணர்கள் வரலாற்றில்தான்” எங்கிருந்தோ வந்தவர்கள் பூசாரிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் குறிஞ்சி பகுதி மக்களே, உங்கள் முருகன்தான் எங்கள் கார்த்திகேயன், முல்லை பகுதி மக்களே, உங்கள் மாயன் தான் எங்கள் கிருஷ்ணன், மருதம்/நெய்தல் மக்களே, உங்கள் இந்திரனும், வருணனும் சில்லறை தெய்வங்கள், எல்லாரும் இது வரை கும்பிட்ட தெய்வங்களை விட்டுவிட்டு நாங்கள் சொல்லும் தெய்வங்களை கும்பிடுங்கள், அப்புறம் நீங்கள் எல்லாம் எங்கள் அடிமைகள் என்று சொன்னார்கள் என்றும், அதை எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்வது நடக்கக் கூடியதாக தெரியவில்லை.
மேலும் இதே ஆரியர்கள்தான் ஐரோப்பாவுக்கும் போனார்கள், இரான், இராக் போன்ற நாடுகளில் இன்று வாழ்பவரும் ஆரியர்கள் என்று சொல்கிறார்கள். அங்கெல்லாம் எப்போதும் ஜாதிகள் இருந்ததாக தெரியவில்லை. அதைப் பார்த்தால் ஆரியர்கள் ஜாதியை எங்கிருந்தோ கொண்டு வந்தார்களா, இல்லை இங்கே ஏற்கனவே ஜாதி இருந்ததா என்று தெரியவில்லை.
அரை டிக்கெட்,
என்ன டெஸ்ட் செய்து கொண்டே இருக்கிறீர்கள்?
முரளி,
யார் முதலில் வந்தவன் என்று வேண்டுமானால் அடித்துக் கொள்ளலாம்.
எல்லாரும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எல்லாருமே வந்தவர்கள்தான்.
ஆகஸ்ட் 27, 2010 at 8:10 மு.பகல்
I have seen your link in Dondu’s.
A controversial blogpost. Or has the potential to raise some furore among the commentators.
Instead of raising the debate, you have taken a side – for brahmins – in the post, which, naturally, makes those who take a contrary view, fear your reaction. Wont it?
You may hve just posted the points for debate and, only at the fag end, or during its course, you may add you personal stand on it, which is, undoubtedly pro-brahmin, with reasons.
ஆகஸ்ட் 27, 2010 at 8:12 மு.பகல்
That is why, I have not found any commentators here who are anti-brahmins issue wise.
ஆகஸ்ட் 27, 2010 at 8:19 மு.பகல்
Coming to your sarcastic comment on those early Tamils with the words பூம்பூம் மாடுகள், I think, it is due to the major fact that the brahmins came with the well developed system of religious way of life, which they called Sanatana dharma. It was developed , as you know well, on the banks of Sindhus and spread to Gangetic valley. Some groups of Brahmins from them ventured far south; and they are the subject of your blogpost.
They came with that fascinating ideas of sanatana dharma. Add to this their skin color and a new language.
Peope who are dark, will always look up to fair skinned people with awe and admiration, with, no doubt, a tinge of inferiority complex.
Even today, brahmin brides are sought after by non brahmins.
So, it was nature which played the trick of submission to brahmins.
If they had come as warriors like Alexander, the locals would have been subjected to slavery or domination, but only out of fear. And, when opportune time occurred, the locals would kill him, and take over. But never such submission would be vountary.
The submission to brahmins was vountary because of the pivot called a new religion.
The brahmins had already written such a religion which would make them sponge on people for livelihood without doing any manual labor. This was done using the names of God. People accepted it and vountarily.
பூம்பூம் மாடுகள் to describe such ancient Tamils is on the spot. ie. hightly appropriate.
contd
ஆகஸ்ட் 27, 2010 at 8:23 மு.பகல்
The matter would have gone on pretty well, but for the overkill. They overdid the importance of being a brahmin. Education was confined. Others were illiterate.
If you give education to people, they will question you later, turn Frankenstein’s monster to eat you, as we saw in freedom struggle. The Brtish taught us English which was used to beat them back. As we saw in the Dalits. When they were kept in slavery, they did not rise in revolt and asked for rights. Now, we start giving them education, they start questioning why they were kept as slaves.
Similarly, the Brahmins were questioned, as centuries came into being where the locals were made aware.
ஆகஸ்ட் 27, 2010 at 8:25 மு.பகல்
The Brahmins should have become alert and made necessary changes in their exclusive and secluded ways of life, by mingling with the locals and accepting their brides etc.
They failed. As late as 1940s, they lived on the same wavelength. At the same time, cornering the best part of life, by playing to tunes of the British colonialists.
The anti brahminism was germinated in the over all dominance of Brahmins. The ‘aware’ nonbrahmins grouped togoether and the anti brahminism became slowly a flame.
Why in TN?
ஆகஸ்ட் 27, 2010 at 8:33 மு.பகல்
Because of the Tamil brahmins’ adamancy to stick to their exclusive way of Hindu life.
Others are Hindus too. But they dont regard the Vedic religion as their only base. The TBs did.
They are proud to follow it, at any costs. The laxity is only now. Not in the 1940s and before.
The TBs failed to make their way of life to build bridges, but only to creat walls between them and others.
This exacerbated the antibrahminism.
Now, when all this is pointed, they try to suppress the history and claim they were not so.
It is falsification of history.
Namboodiris were so notorious in such vedic mania. But they were tamed by the solidarity of malayalees. Another reason is that the malayalees who tamed them, are not all Hindus. Moslesm and Christians malayalees did all the work.
Today, Namboodris are not lax. They still follow their riturals and prayers. But only as a private life. Earlier, they took nair girls for fornication, all in the name of god. Today, they gave up such antics.
TBs are not all that club. The younger generation is different.
If the integration continues, the caste of being a TB itself will become casualty.
Without integration, the antibrahminsm will continue, the help of non-brahmins like Jeyamohan’s support nothwithstanding.
With absoluted integration, the caste of TB will be lost.
Between the devil and deep sea.
ஆகஸ்ட் 27, 2010 at 4:41 பிற்பகல்
ஜோ, மறுமொழிகளுக்கு நன்றி!
// Instead of raising the debate, you have taken a side //இதை நீங்கள் விவாதம், எதிர்வினை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதுதான் பிராமணர்களின் வரலாறு என்று அடித்து சொல்பவர்கள் யாரும் இதை உங்கள் ஸ்டாண்டர்ட்ஸ் படி விவாதமாக ஆரம்பிக்கவில்லை என்று நினைவூட்டுகிறேன்.
// They came with that fascinating ideas of sanatana dharma. Add to this their skin color and a new language. Peope who are dark, will always look up to fair skinned people with awe and admiration, with, no doubt, a tinge of inferiority complex… So, it was nature which played the trick of submission to brahmins. // பிராமணர்களை விட வெள்ளையான தோலுடனும், புதிய மொழியுடனும், புதிய மதத்துடனும் ஒரு நானூறு வருஷங்களுக்கு முன்னால் நிறைய பேர் வந்தார்கள். அவர்களுக்கு அரசியல் அதிகாரம் இருந்தது; இருக்கும் மதத்தில் நசுக்கப்பட்டவர்கள் ஏராளம். அவர்களால் ஓரளவுக்காவது பணம், படிப்பு, முன்னேற வாய்ப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றை கொடுக்க முடிந்தது. (பிராமணர்கள் படிப்பை மறைத்தார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள்) ஆனாலும் அவர்களால் ஒரு பத்து சதவிகிதம் தமிழர்களை கூட இத்தனை வருஷமாக முயன்றும் மதமாற்றம் செய்யமுடியவில்லை. இப்படி எழுதவதற்கு முன் அதைப் பற்றி சிந்தித்தீர்களா?
முன்முடிவுகளோடு விவாதிக்காதீர்கள், Theories should fit available facts, we shouldn’t twist facts to accomodate our pre-determined theories.
விருட்சம், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்களா இல்லையா என்பது ஒரு academic question மட்டுமே. வந்திருந்தால் என்ன, வராவிட்டால் என்ன? இன்றைக்கு it doesn’t make a difference.
ஆகஸ்ட் 27, 2010 at 1:09 பிற்பகல்
http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.htm
The evidence of science now points to two basic conclusions: first, there was no Aryan invasion, and second, the Rigvedic people were already established in India no later than 4000 BCE. How are we then to account for the continued presence of the Aryan invasion version of history in history books and encyclopedias even today?
ஆகஸ்ட் 27, 2010 at 5:12 பிற்பகல்
//it doesn’t make a difference.//
It does. bcoz this is the basis for the divide and rule by british and till date by politics.
ஆகஸ்ட் 27, 2010 at 11:04 பிற்பகல்
That is true! It is irrelevant except for the propaganda angle.
ஆகஸ்ட் 28, 2010 at 9:04 மு.பகல்
இப்படிச் சொல்லவதை எல்லாம் மக்கள் எப்படி நம்பினாங்க என்ற angle லில் relavant இல்லையா?
ஆகஸ்ட் 28, 2010 at 6:36 பிற்பகல்
விருட்சம், எப்படியாவது மக்களை நம்ப வைப்பதுதானே ப்ராபகண்டாவின் குணம்?
ஆகஸ்ட் 29, 2010 at 1:54 மு.பகல்
அலுவலக நண்பரிடம் எதேச்சையாக வேதம் பற்றி பேச நேர்ந்த போது, நீங்கள் கைபர் கணவாய் வழியாக கொண்டு வந்தவை தானே வேதங்கள் என்று கூசாமல் கூறினார். திரிக்கப்பட்ட வரலாறை நிஜ வரலாறாகவே மக்கள் எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று. இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் நிறைய படித்தவரும் அல்ல. ஆனால் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் எப்படி அவை மக்களிடையே மிகப்பெரிய பிளவை உண்டாக்கியிருக்கிறது என்று நினைக்கும் போது அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த நண்பர் வன்னியர் என்று தெரிவித்தார். வன்னியர் என்றால் நாயக்கரை சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். அப்படியென்றால் நீங்கள் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்தேரிகள் என்று கொள்ளலாமே என்றேன். அதிர்ந்தார். இவையாவும் அரசியல் வாதிகளின் சுயநலத்திற்காக தூவப்படும் விஷங்கள். என்னைப் பொறுத்தவரை வரலாறு அதுவும் இந்திய வரலாறு என்றாலே உண்மை வேறு – வ்ரலாறு வேறு என்று நம்புபவன். பலவிஷயங்கள் திரித்துக் கூறப்பட்டதும் மறைக்கப்பட்டதுமாகத்தான் இருக்கும். திரிக்கப்பட்டதில் வெள்ளையர்கள் பங்கும் அதிகம், லோக்கல் ஆசாமிகள் பங்கும் அதிகம். ஒரு அரசியல் வாதிக்கு அனுக்கூலம் என்றால் பாய் மார்கள் வந்தேரிகள், ப்ராமணன் வந்தேரிகள், நாயக்கர்கள் வந்தேரிகள், நாயர்களும் வந்தேரிகள் என்று இஷ்டத்திற்கு வரலாற்றை மாற்றி எழுத கூறிவிடுவான். புலிகேசி படத்தில் கூறுவதை போல “நூறு வருடம் கழித்து வரும் சந்ததியினருக்கு இந்த உண்மைகள் தெரியவா போகிறது?” என்று புரியவைத்தேன். ஆனால் அந்த மனிஷனோ ப்ராமணர்கள் வந்து தான் எங்களை அடிமையாக்கினார்கள் என்பதில் பிடிவாதமாக இருந்தார். சரி இப்போதும் அடிமைதானா என்றேன், ஆமாம், என்றார். 2% கூட இல்லாத ப்ராமணர்களுக்கு 98% சதவீதம் இருக்கும் நீங்கள் இப்போதும் அடிமை தான் என்று நினைத்துக் கொண்டால் உங்களை அடிமையாக்க ப்ராமணர் தேவையில்லை. அப்பிரிக்க காட்டுவாசியோ ஏன் ஒரு மனிதக்குரங்கோ கூட போதும். நீங்கள் யாருக்கும் அடிமையாக இருப்பீர்கள் என்று நகர்ந்தேன். இந்த ஆட்டு மந்தை கூட்டத்திற்கு வேறென்ன கூற முடியும்.
ஆகஸ்ட் 29, 2010 at 5:32 மு.பகல்
ராம், விருட்சம் சொன்னது போல ப்ரோபகன்டாவை ஒரு சிலராவது நம்பாமல் போய்விடுவார்களா?
ஆகஸ்ட் 29, 2010 at 10:02 மு.பகல்
RV
I am talking about an age millennia before. You are talking about an age a few centuries before.
The characteristics of the ages are different.
The Vedid brahmins did not come with the target of converting the indigenous people of India in souther parts. The movement was in search of a better life somewhere and they may have a variety of reasons for the migration. When they arrived they found a different people with different life style. And it was co habitation in which the giving and taking was a natural act. It is common in human psychology to marvel at a thing which is not ours especially if it is attractive. As we see today in India the fascination with western culture after the technology brought such cutlure to India.
I want to go beyond draividian politicains to look at the matter. Dont mistake me for saying this: It requires just common sense to see why people behave in certain way.
Your blog post just takes dravidian politicians propoganda to mock at – a general habit of Tamil brahmins. But I would like to see behind every action, there may be cause or causes. And we cant brush aside everything summarily motivated.
That is why, I would like you not to write things from the general point of view a typical Tamil brahmin takes against the dravidian politicians.
So your comparision between the evangelists and the ancient brahmins who came from north is completely out of joints.
Ancient brahmins came to live. Evangelists came to preach and propogate. Why did you forget that?
I labour at the point that it was a natural act of history that vedic brahminism entered Tamil life. And, as usaul with like things, it came to pass that the brahmninsm swept Tamil indigenous god worship. It may be intentional later on to have done that with motive to dominate the natives,yet the historians say, the acceptance of brahminism was voluntary. But drvaidian politicians or scholars say, no it was done with motive which is now being glossed over as vountary. I dont want to go into that.
I would like you to accept one thing. If you dont, say why.
Brahmins came from north to live in Tamil country. They brought many things with them the chief one was their vedic religion. They bartered it with the natives. In the process, they took many things from the natives. You are peeved at my mentioning skin color. But the truth is that the brahmins who came, were fair skinned people. Naturally every one who came from the colder parts. Today, all of them may not look so: but the reaons for that lies in the course of our long histroy. Suffice it to say, they looked different; and the difference was not loathed; but longed for. Even today, it is a common complaint heard everywhere in India that Indians give preferential treatment to white skinned european tourists and the blacks are given racist treatment!
However, in hindsight, we can say, the process was incomplete. It was vitiated by brahmins themselves by not giving all; so that they always remained out of the reach so as to creat an aura. The brahnmins enjoyed the aura. Hence the respectability they enjoyed receiveing from the natives for millennia, which came to be questioned only recently.
I am not here writing with preconceived notions. I am just seeing everything with a simple mind, and allow myself to be taken to that conclusion which my thinking lead me to me, whatever that may be!
ஆகஸ்ட் 29, 2010 at 10:24 மு.பகல்
This is for ram.
Tell a sourashtrian of Madurai, ‘You came from Kutch 3 centuries ago and your mother tongue is not Tamil but a Saurashtrian, a form of Gujrati spoken in Kutch’
The Saurashtrian wont get angry. He would say: True indeed.
He may add: Our mother tongue is not Tamil but we accept Tamil for our daily life in public. We speak our mother tongue at home.
You may go to Kumran blog. He has written like this. All Saurashtrians say this.
Yet, they have accepted the food habits and religious life – the blend of vedic and native Hinduism so much so that they are being heckled at for being so close to Brahmins or brahmin supporters.
Take the case naickers now. The famous representative of that community is Ke.Rajanarayanan. In Karisal Kattu Kadudasi, he traced the roots of his people to AP, who were sent to settle here, by Naicker Kings when Vijayanagar empire overran TN. They follow the Vaishnavism of AP variety and speak Telugue, albeit it is a mangled variety enought to make a Telugu man chuckle, at home. Vaiko, Veerasaamy, Vijayakanth and so many others never got angry when someone say they speak Telgu at home. They all accept the historical truth that their ancestors were Telugu speaking people who migrated or made to migrate to TN.
Similarly, maarvaadis, and Kanndad brahmins and people with malayalee roots in KK dist.
None of them take offense and deny their roots.
It is Tamil brahmins like you who take offence if someone say in the ancient time, the original ancestors of TN brahmins came from North.
Why?
If you say, like others, Yes, it is true. But it is in the ancient past. Migration is always a historical act. Originally our mother tongue was Sanskrit. No longer so. Tamil came to be our tongue, both at home and outside, from time immmeorial, unlike Nayarakar or others, we speak only Tamil at home. Nevetheless, we want to worship our God and goddesses in Sanskrit, not because it was our original tongue, but because that tongue was prescribed by our forefathers for such worship and we fee that tongue is not mere tongue, but divinely ordered”
You accept such things boldly. Everything will fall into their fine places; and you need feel guilty and remorseful.
ஆகஸ்ட் 29, 2010 at 10:58 மு.பகல்
Last line need emendation:
Everything will fall into their fine places and you need not feel guilty and remorseful
ஆகஸ்ட் 30, 2010 at 5:01 மு.பகல்
ஜோ, நீங்கள் ஒரு தியரியை – “வந்தேறிகளின்” வெள்ளைத் தோலும், புதிய மதமும் தமிழர்களை தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று ஒத்துக் கொள்ள வைத்தது – முன் வைக்கிறீர்கள். அதற்கு ஒரு ஆதாரமும் – குறுன்தொகையிலே வெள்ளைத் தோல் மீது மயக்கம், நெடுனல்வாடையிலே “புதிய” மதம் மீது மயக்கம் என்ற ரீதியில் – ஒன்றும் நீங்கள் கொடுக்கவில்லை. சரி வெள்ளைத் தோலும், புதிய மதமும், அரசியல் அதிகாரம், நசுக்கப்பட்ட ஜாதிகள் ஓரளவாவது பொருளாதார, சமூக முன்னேற்றம் அடைய ஒரு வாய்ப்பு என்று இன்னும் பல காரணிகள் இருந்தும் பிராமணர்கள் அடைந்த “வெற்றியில்” ஒரு சிறு பகுதியைத்தானே அடைய முடிந்தது என்று கேட்டால் அது வேறு காலம் என்கிறீர்கள். அதே நேரத்தில் இப்போதும் வெள்ளைத் தோல் மீது மயக்கம் என்றும் சொல்லுகிறீர்கள். உங்கள் வாதம்தான் என்ன? பிராமணர்கள் வந்த பல நூறாண்டுகளுக்கு முன் வெள்ளைத் தோல் மீது மயக்கம், ஐரோப்பியர்கள் வந்த சில நூறாண்டுகளுக்கு முன் அந்த மயக்கம் போய்விட்டது, இப்போது திரும்பி வந்துவிட்டது என்பதா? ரொம்ப சவுகரியமான வாதமாக இருக்கிறதே? உங்களுக்கு தேவைப்பட்டபோது வருகிறது, தேவை இல்லாதபோது போய்விடுகிறது!
பிரமாணர்கள் “வந்தேறிகளா” இல்லையா என்றே எனக்கு தெரியவில்லை. யாராலும் இதை உறுதியாக சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். வந்தவர்கள் என்று சொல்லவும் காரணிகள் இருக்கின்றன. இங்கே இருந்தவர்கள் “பிராமணர்களாக” மாறினார்கள் என்று சொல்லவும் காரணிகள் இருக்கின்றன. இதைப் பற்றி விவரமாக பேசும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
நீங்கள் ராமுக்கு எழுதிய எதிர்வினையைக் கண்டு சிரிப்புத்தான் வருகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வந்த சவுராஷ்டிரியர்கள், எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வந்த நாயக்கர்கள் ஆகியோரை யாரும் வந்தேறிகள் என்று பேசுவதில்லை. அவர்களுக்கு பல நூறாண்டுகள் முன் வந்திருக்கக் கூடும் பிராமணர்கள்தான் வந்தேறிகள். அவர்களைத்தான் தமிழர்கள் இல்லை என்று தமிழக முதல்வர் உட்பட்ட ஒரு (சிறு) கூட்டம், ஆனால் வலிமையாக குரல் கொடுக்கும் கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் ஒரு மறுமொழி வந்தது – பிராமணர்கள் வீட்டில் சமஸ்கிருதம் பேசுகிறார்கள், அதனால் அவர்கள் தமிழர்கள் இல்லை! நீங்களும் சொல்கிறீர்கள், சமஸ்கிருதம்தான் பிராமணர்களின் ஆதி தாய்மொழி என்று. சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் பிராமணர்களில், அதுவும் தமிழக பிராமணர்களில் எப்போதும் ஒரு சிறு கூட்டம்தான். என்ன பூச்சியம் சதவிகிதத்தை விட ஒன்று பெரியது, மற்ற ஜாதிகளில் அது கிட்டத்தட்ட பூச்சியம் சதவிகிதம். நீங்கள் சொல்கிறீர்கள், வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்களே. ஆனால் சமஸ்கிருதம் தெரியாத ஒரு கூட்டத்தைப் பற்றித்தான் இப்படி ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டிருக்கிறது!
ஆகஸ்ட் 30, 2010 at 7:41 மு.பகல்
உங்கள் வாதம்தான் என்ன?
Simple.
Let us throw away the books published by Saiva Sithaantha Kazhagam Tirunelveli written by many Pillais with biases. Let us throw away the motivated campaign against Tamil brahmins by dravidian politicians using the past of the language and religion.
Let us rely only on our common sense. What do we understand?
Sanskrit is not native to Tamil land. She was born and developed in the far north thousands of years ago. At the time, the people here lived in ignorance of people there. But we come across Sanskrit words right from Tolkaappium, Sangam poetry and when we reach the later period, also BC, in Tirukkural and Silappadikaaram, we come across not only the increase in number of such words, but also references to vedic ceremonies etc.
Who brought the language to Tamil land? If not brahmins whose mother tongue is Sanskrit, who did that? I referred to the puranic story of Agasthian overcoming Deccan king and entering Tamil country with brahmins. He is known as the first brahmin traditionally, meaning prior to him, there were none.
How come?
Similarly, the vedic religion. It is alien to Tamil country. It was born on the banks of Sindhus and developed there. It was brought to Tamil land.
Who brought it here?
If those who came from North is not fair skinned as they came from colder climate, do you mean to say they were dark skinned?
If dark skinned people wont get attracted to the fair skinned people, do you mean to say the human psychology I was referring to is a false propoganda?
The Language and the Religion came to Tamil land in millennia BC.
I did not say victory to brahmins. Only I said that the process of sanskritisation of early indigenous worship was gradual; and there was no resistence. If there were, it would have got mentioned; and at least the brahmin poets like Kappilar and Paranar and other fair minded poets would have referred to the killings of brahmins. THERE WAS NO ANTI BRAHMINISM IN ANCIENT TAMILNADU. Hence, we are fair to assume that the brahmins did well in sanskirtisation of early Tamil worship. The giving and taking indeed was unavoidable.
Comparision with evangelists is used to divert the argument to politican channels. We could avoid it.
ஆகஸ்ட் 30, 2010 at 7:52 மு.பகல்
அவர்களுக்கு பல நூறாண்டுகள் முன் வந்திருக்கக் கூடும்
No guesses. They came. It is they who revealed it to us. In addition, we read about them in history that Naicker kings brought telugue speaking people along.
Sauarashtrians never denied that they migrated to Tamilnadu.
Both the naickers and Saurashtrain never feel embarassed to deny their origins.
அவர்களுக்கு பல நூறாண்டுகள் முன் வந்திருக்கக் கூடும் பிராமணர்கள்தான் வந்தேறிகள்.
vantheerikal means migrants.
The naickers and saurashtrians are migrants. Any doubt?
பிராமணர்கள்தான் வந்தேறிகள். அவர்களைத்தான் தமிழர்கள் இல்லை என்று தமிழக முதல்வர் உட்பட்ட ஒரு (சிறு) கூட்டம், ஆனால் வலிமையாக குரல் கொடுக்கும் கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
Here, we should not be bothered about what politicians say. We are not discussing antibrahminism here.
பிராமணர்கள் வீட்டில் சமஸ்கிருதம் பேசுகிறார்கள், அதனால் அவர்கள் தமிழர்கள் இல்லை! நீங்களும் சொல்கிறீர்கள், சமஸ்கிருதம்தான் பிராமணர்களின் ஆதி தாய்மொழி என்று. சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் பிராமணர்களில், அதுவும் தமிழக பிராமணர்களில் எப்போதும் ஒரு சிறு கூட்டம்தான். என்ன பூச்சியம் சதவிகிதத்தை விட ஒன்று பெரியது, மற்ற ஜாதிகளில் அது கிட்டத்தட்ட பூச்சியம் சதவிகிதம். நீங்கள் சொல்கிறீர்கள், வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்களே. ஆனால் சமஸ்கிருதம் தெரியாத ஒரு கூட்டத்தைப் பற்றித்தான் இப்படி ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டிருக்கிறது!
RV!
Here the question is not who is a Tamil and who is not.
Standing today from a historical point of view, we can say that all of us who have lived in Tamil land from ancient times, whereever they came from, are Tamils, even if they speak Telugu at home. But am I discussing that?
Today brahmins of TN are not ‘pure’ bloodline of their ancient ancestors who came from North.
Since the ancient brahmnins mixed their blood with the locals, only with the local priestly class like pillais though, what we see today is a cross breed between Sanskirt speaking ancient Brahmins and Tamil speaking priestly class Pillais.
But we are not discussing today brahmins. But the origins of the Tamil brahmin ancestors.
I also question why the origins, if referred to, embarasses Tamil brahmins.
I does not a saurastrian or a naicker. Why it does to only TB is my question.
I further say, as long as you feel embarassed, it becomes a vantage point in the antibrahminism campaign to throw salvos.
If you say, yes. in BC and laught it off. Everything will be silent then.
This is my point.
ஆகஸ்ட் 31, 2010 at 6:49 மு.பகல்
ஜோ, கொஞ்சம் rambling ஆக எழுதுகிறீர்கள், இன்னும் கொஞ்சம் சுருக்கமாகவும் கோர்வையாகவும் எழுதினால் நன்றாக இருக்கும்.
நான் சைவ சித்தாந்த கழகத்தைப் பற்றி என்ன சொல்லிவிட்டேன்? எதை தூக்கி எறிய சொல்கிறீர்கள்?
மீண்டும் சமஸ்கிருதம் பிராமணர்களின் தாய்மொழி என்கிறீர்கள். சமஸ்கிருதத்தில் பேசக் கூடிய – கவனிக்கவும், தினசரி வாழ்க்கைக்கான பேச்சை பேசக் கூடிய – ஒரு பிராமணக் குடும்பம் கூட தமிழ்நாட்டில் பல நூறாண்டுகளாக இருந்ததாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் – பதினாறாம் நூற்றாண்டில்/ஒன்றாம் நூற்றாண்டில், அட கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், சதுர்வேதிமங்கலத்தில்/காஞ்சிபுரத்தில்/ பிராமணக் குடும்பங்கள் சமஸ்கிருதம் பேசின என்று ஏதாவது தெரியுமா உங்களுக்கு? சமஸ்கிருதம் எழுத்து மூலம் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்பட்டது என்றும் பேச்சு வழக்கில் அது பயன்படுத்தப்படவே இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது சரியா, இல்லை நீங்கள் சொல்வது சரியா என்று எனக்கு தெரியாது; ஆனால் அடித்துப் பேசுவதாலேயே உங்களுக்கு அது பற்றி நிறுவ முடியாது என்று நிச்சயமாக தெரியும்.
அகத்தியர் பற்றி குறிப்பிடுகிறீர்கள். அகத்தியர் முதல் பிராமணர் என்று நான் இது வரை கேட்டதில்லை. பரசுராமரைப் பற்றி இப்படி சில நம்பூத்ரி ஐதீகங்களில் சொல்வதுண்டு. ஓரளவு ஐதீகங்களிலும் புராணங்களிலும் எனக்கு பரிச்சயம் உண்டு. எங்கும் தமிழகத்துக்கு வந்த முதல் பிராமணர் என்று எவரையும் குறிப்பிட்டு நான் பார்க்கவில்லை. நீங்கள் எங்கே படித்தீர்கள்? ராவணன் கூட பிராமணன்தான் என்பதை நினைவுபடுத்துகிறேன். புராணக் கதைகளில் மகாபலி கேரளத்தில் இருந்ததாகவும், வாமனனாக வந்தவரைப் பற்றி அங்கே இருந்த சுக்ராச்சாரியார் எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. சுக்ராச்சாரியார் பிராமனர்தானே? இன்றும் மகாபலிக்காகத்தான் விஷு பண்டிகை!
சரி முதல் பிராமணன் எக்கேடோ கேட்டுப் போகட்டும். சமஸ்கிருதம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்கிறீர்கள். ஆதாரம் தரமுடியாவிட்டாலும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் திருமாலும் சிவனும் தமிழ் தெய்வங்களே என்றும் அவை “ஆரிய” தெய்வங்களுடன் ஒன்று கலந்தன என்றுதான் எனக்கு தோன்றுகிறது. வேதங்களில் விஷ்ணுவும் சிவனும் பெரும் கடவுள்கள் இல்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்.
மீண்டும் மீண்டும் வெள்ளைத்தோல் என்கிறீர்கள். அது என்னங்க ஐரோப்பியர்களின் வெள்ளைத்தோலை கண்டால் மட்டும் ஒன்றும் நடப்பதில்லை? உங்கள் தியரிக்கு ஆதாரமாக எதையாவது சொல்லுங்கள்! இந்த சங்கப் பாட்டிலே வெள்ளைத்தோல் அழகு, கருப்புத்தோல் அழகில்லை என்று சொல்லப்படுகிறது, தொல்காப்பியத்தில் இப்படி வருகிறது என்று எதையாவது காட்ட முடியுமா? அப்புறம் பிராமணர்கள் வெள்ளை வெள்ளை, ஏனென்றால் அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குளிர் பிரதேசங்களில் வாழ்ந்தார்கள் என்கிறீர்கள். பல ஆயிரம் வருஷமாக உடல் உழைப்பு இல்லாமல் நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டவர்களுக்கு உடல் கருக்காமல் இருக்காதா? தியரி என்பது இருக்கும் நடப்புகளை விளக்க வேண்டும். வெள்ளைத்தோலை கண்டதும் தான் “அடிமை” என்று ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு தமிழர்கள் கேனையர்கள் என்றால், இன்றும் அவர்கள் வெள்ளை நிறம் கண்டு சொக்கிப் போவது உண்மை என்றால் அவர்கள் அத்தனை பேரும் இந்நேரம் கிருஸ்துவர்களாக மாறி இருக்க வேண்டும். அது என்ன கேனத்தனம் நடுவில் மட்டும் இல்லாமல் போகிறது? அது என்ன இந்த கேனத்தனம் ஒரு பாட்டில், இலக்கியத்தில், செப்பேட்டில், கல்வெட்டில் பதிவு செய்யப்படவே இல்லை? கபிலரும் பரணரும் பிராமண எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்று குறிப்பிடுகிறீர்கள். இந்த பிராமனப்படுத்துதலையும் பதிவு செய்யவில்லையே? இந்த கேள்விகளை பல முறை கேட்டுவிட்டேன். நீங்கள் சவுகரியமாக கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்.
மீண்டும் சொல்கிறேன், பிராமணர்கள் வந்தேறிகள் என்று சொல்வதற்கு எனக்கு தெரிந்து போதிய ஆதாரம் இல்லை. பல சர்ச்சுகளில் லத்தீனில் சடங்குகள் நடக்கின்றன என்பதால் கத்தோலிக்கர் எல்லாம் இதாலியிலிருந்து குடியேறியவர் என்று பொருள் கொள்வதற்கில்லை. மசூதிகளில் அரபியில் சடங்குகள் நடக்கிறது என்றால் முல்லாக்கள் எல்லாரும் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் என்று பொருள் கொள்வதற்கில்லை. சமஸ்கிருதத்தில் பூஜை நடத்தினால் தமிழக பிராமணர் எல்லாம் வந்தவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. அதே நேரத்தில் எல்லா பிராமணர்களும் ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அந்த ரிஷிகளைப் பற்றி தமிழ் legends எதுவும் இல்லை. அது அவர்கள் வந்தவர்கள் என்று நினைக்க ஒரு காரணி ஆகிறது. எனக்கு இதைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
அப்படி வந்தேறிகளாக இருந்தாலும் வேறு எங்கோ சொன்ன மாதிரி அது ஒரு academic question மட்டுமே. ஆனால் பிராமணர்கள் வந்தேறிகள் என்று சொல்பவர்கள் அடுத்த வாக்கியமாக சொல்வது அவர்கள் தமிழர்கள் இல்லை என்பது. ஜோ இதற்கு விதிவிலக்காக இருந்தால் சந்தோஷமே. ஆனால் இன்றும் ஒரு சிறு கூட்டம் இப்படித்தான் வலிமையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாயக்கர்கள், ரெட்டிகள் போன்று, மைசூர் ஐயங்கார்கள் போன்று ஜாதிக்குரிய ஒரு பாரம்பரிய migration legends எதுவும் தமிழக பிராமணர்களிடம் இல்லை. (நம்பூதிரிகளிடம் கூட இருக்கிறது.) இருந்தால் ஜோ விரும்புவது போல அதைப் பற்றி பேசமுடியும். (நாயக்கரைப் பற்றி இந்த விவாதத்தில் இழுத்தது ஜோதான் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.) இதில் embarassment எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியவில்லை.