சமீபத்தில் சுப.வீரபாண்டியன் இலங்கை தமிழர் பற்றி கொடுத்த பேட்டி ஒன்றை கண்டேன். அந்த போஸ்ட்கள் இங்கே, இங்கே.
அவருடன் எனக்கு நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. படித்த கொஞ்சத்தை வைத்துக்கொண்டு இதை உறுதியாக சொல்ல முடியாது – ஆனால் அவருக்கும் பிராமண எதிர்ப்பு வெறி இருப்பது போல இருக்கிறது. அவர் கலைஞருக்கு அனாவசியத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவது போல இருக்கிறது. ஆனால் அவர் இலங்கை பிரச்னை பற்றி சொல்லி இருக்கும் சில கருத்துகள் எனக்கு சரி என்று படுகின்றன.
நான் ஏழெட்டு நாட்களுக்கு முன்னால் எழுதிய மறுமொழி இன்னும் ஏற்கப்படவில்லை போலிருக்கிறது. அது இங்கே.
சுப. வீ. அவர்களே, தமிழ் தேசியவாதம் என்றால் என்னவென்று சரியாக புரியவில்லை. உங்கள் அறிமுகப் பக்கங்களை படித்தும் புரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா?
தனி ஈழம் கேட்டால் தனி தமிழ் நாடு கேட்பார்கள் என்பதெல்லாம் அனாவசிய பயம்தான். இந்தியா ஆயுதம் விற்காவிட்டால் சீனா விற்கும் என்பதும் அயோக்கியத்தனமான வாதம்தான். (இப்படித்தான் ஹிட்லருக்கும் ஆயுதம் விற்றிருப்பார்கள்.) புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே தவறு என்பது பேச்சுரிமையை பாதிக்கும் விஷயம்தான். எனக்கு சட்ட நுணுக்கங்கள் புரியவில்லை – அதனால் எங்கே சட்ட மீறல் ஏற்படுகிறது என்பது புரியவில்லை.
ஆனால் தமிழ் ஈழம் இந்தியாவுக்கு நட்பு நாடாகத்தான் இருக்கும் என்று எப்படி உறுதியாக சொல்லுகிறீர்கள்? பங்களாதேஷ் என்ன இந்தியாவுடன் பிரமாத நட்பு பாராட்டுகிறதா? இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலிருந்து யாரும் இங்கே வந்து எந்த அரசியல் தலைவரையும் கொல்லவில்லை. புலிகளோ ராஜீவை கொன்றிருக்கிறார்கள், கலைஞருக்கு மிரட்டல் வந்து வைகோ பிரிந்தார், ஜெயலலிதாவுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. தனக்கு விரோதமாக செயல்படும் எல்லாரையும் ஞாபகம் வைத்திருந்து பழி வாங்கும் குணம் புலிகளுக்கு இல்லை என்று நினைக்கிறீர்களா? அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன், சிரி சபாரத்னம் போன்றவர்கள் கதி மறந்துவிட்டதா?
சீனாவின் முத்து மாலை நடவடிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது என்ன முத்து மாலை?
கலைஞர் செய்வது சரி என்று நினைக்கிறீர்களா? எல்லாரும் ராஜினாமா என்றார், எல்லாரும் அப்படியேதான் இருக்கிறார்கள். பிரணாப் போகிறார் என்றார், யாரும் போகவில்லை. நான் கலைஞர் சொல்வது சரி என்று நினைக்கவில்லை – ஆனால் அவர் சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. வைகோ, நெடுமாறன் போன்றவர்களுடன் நான் வேறுபடுகிறேன், ஆனால் அவர்களிடம் இலங்கை தமிழர்கள், புலிகளை பொறுத்தவரையில் எந்த விதமான போலித்தனமும் இல்லை இன்று நினைக்கிறேன். கலைஞருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையாக இருக்கிறது. பதவிக்கு சங்கடம் வராத வரையில் இரங்கல் கவிதை எழுதுவேன் என்கிற நிலைமையில் அல்லவா அவர் இருக்கிறார்?
புலிகள் என்றால் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்றால் புலிகள் என்பது உண்மையா இல்லை ஊடகங்கள் உருவாக்கும் மாயையா? புலிகளுக்கு எதிர்ப்பு நிலை எடுக்கும் என் போன்றவர்கள் தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்க முடியாதா? என்னுடைய ஒரு போஸ்ட் இங்கே
உங்களுடன் பல விதங்களில் நான் வேறுபட்டாலும், உங்களுடைய “இந்தியாவும் தமிழர்களும் என்ன செய்ய வேண்டும்” என்பது எனக்கு சரியாக படுகிறது. இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்வது என்னதான் ராஜீவின் கொலை ஏற்படுத்திய காயம் இருந்தாலும் பெரிய தவறுதான்.
கடைசியில் பார்ப்பனர்கள் என்று சொதப்பியதுதான் frustrationஐ கிளப்புகிறது. இதற்கு மறுமொழி எழுதும் முன் நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்று சொல்லியாக வேண்டும். இதை சொன்ன பிறகு பலர் நான் என்ன சொல்கிறேன் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை, அம்பி என்று ஆரம்பித்துவிடுவார்கள். டாக்டர் ருத்ரனின் ப்ளாகில் ஒரு முறை Dalit Fury என்ற ஒரு போஸ்டுக்கு மறுமொழி எழுதும் போது இதை சொல்ல மறந்துவிட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அவர் உன் ஜெனோடைப் என்ன என்று சந்தேகப்பட்டார் – இது வரையில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.
பார்ப்பனர்கள் எந்த விதத்தில் தமிழுக்கு விரோதியாக இருக்கிறார்கள்? சிதம்பரம் தீக்ஷிதர்கள் தேவாரம் பாடக்கூடாது என்பதாலா? இப்படி உங்களுக்கு பத்து விஷயம் தெரியுமா? அப்படித்தான் என்றால் அதே லாஜிக்கை உபயோகித்து இப்படி சொல்வீர்களா? தமிழ் நாட்டில் தலித்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் அனேகமாக எல்லாமே தேவர் ஜாதியினர் நடத்துவது. தேவர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று எந்த மேடையிலாவது நீங்கள் பேசுவீர்களா? முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று பேசுவீர்களா? (அப்படி பேசினால் நான் அதையும் எதிர்ப்பேன்) என்னை நான் பிறந்த ஜாதியால் பார்ப்பனன் என்று சொல்வீர்கள், பிறகு பார்ப்பனர்கள் தமிழ் விரோதி என்பீர்கள். நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? > – என்ன கொடுமை சார் இது? என்னுடைய இன்னொரு போஸ்ட் இங்கே
ஜனவரி 4, 2009 at 6:09 பிற்பகல்
உங்கள பதிவின் பல அம்சங்களில் நான் ஒன்று படுகிறேன்.
//தமிழ் தேசியவாதம்//
என்னை பொருத்த வரை தேசம் என்ற எல்லைக்கோடுகளே அர்த்தமற்று போகின்ற இன்றைய உலகமய சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒரு அரசியல் முழக்கம்.
இன்று தமிழனுக்கு தனி எதிரி மலையாளிக்கு தனி எதிரி என்றெல்லாம் கிடையாது…தமிழக ஆலைகளை யார் அழிக்கின்றனரோ அவர்கள்தான் கேரள விவசாயத்தை அழிக்கின்றனர், இப்படி மராட்டிய விவசாயிகள், ஒரிசா மீனவர்கள், வங்காள பழங்குடியினர் என இந்தியாவில் யாரை எடுத்துக்கொண்டாலும் பொது எதிரிதான். ஒரு மையப்படுத்தப்பட்ட அரசியல் முழக்கத்தின் கீழ்தான மக்களை அணிதிரட்டி எதிரியை வீழ்த்த முடியுமே தவிர பிரிவினைவாத முழக்கம் எடுபடாது.
//ஆனால் தமிழ் ஈழம் இந்தியாவுக்கு நட்பு நாடாகத்தான் இருக்கும் என்று எப்படி உறுதியாக சொல்லுகிறீர்கள்? //
புலிகளின் தலைமையிலான தனி ஈழம் இந்தியாவுக்கு நட்பு நாடோ இல்லையோ அமெரிக்காவுக்கு நட்பு நாடாக இருக்கும்.
உள்ளூர் ரவுடி இலங்கை அரசே எதிர்க்கும் புலிகள் உலக ரவுடி அமெரிக்காவை எதிர்த்து ஏதாவது பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
//கலைஞர்//
இன்னுமா இவரை ஜனங்க நம்பிக்கிட்டிருக்காங்க.
ஒரு வகையில் கலைஞர் பாவம். இலங்கை பிரச்சனையினால் மிகவும் பாதிக்கபட்ட தலைவர் இவர்தான்..மற்றவர்களுக்கு ஆட்சியோ அதிகாரமோ இல்லை அதனால் சவுன்ட் விடுகிறார்கள் கலைஞருக்கு ஆட்சி, அதிகாரம் இருப்பதால் அதை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை பிளட் இஸ் திக்கர் தேன் வாட்டர் பட் பவர் இஸ் திக்கர் தேன் பிளட்…கலைஞர் ஒரு கோழைதான் ஆனால் வைகோ வகையறாக்கள் எல்லாம் ஆட்சியில் இருந்தால் இந்த அளவுக்கு கூட செய்திருக்க முடியாது என்பதே உண்மை. காங்கிரஸ் அரசு இலங்கையை ஆதாரிக்கிறது..ராஜிவினால் அல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு ராஜீவ் ஒரு சென்டிமென்ட மட்டுமே!
இலங்கை பிரச்சனையில் வினவு கட்டுரைகளுடன் நான் உடன்படுகிறேன்…
இந்த சுட்டியில் உள்ள கட்டுரைகளை படியுங்கள்
http://vinavu.wordpress.com/category/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/
//புலிகள் என்றால்//
இப்படி ஒரு கருத்தாக்கம் வந்த்தற்கு மற்ற போராளிக் குழுக்களை ஒழித்து தன்னை ஒரே போராளிக்குழுவாக மாற்றிக் கொண்ட புலிகளே
இதற்கு முதல் காரணம் , பிறகு தமிழக அரசியல்வாதிகளும் மீடியாவும். இன்று வேறு யாரும் இலங்கை அரசை எதிர்த்து போராடாத்தால் போர் நடைபெறும் போது நாம் புலிகளை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை!
மற்றபடி புலிகளை ஜனநாயக தன்மையற்ற பாசிஸ்டுகளாய் சீரழிப்பதில் இந்திய ரா வெற்றி பெற்றது. அதில் துவங்கிய புலிகளின் வீழ்ச்சி இன்று முற்றாக அழியக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்…மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது..
//பார்ப்பனர்கள் தமிழ் விரோதி //
பார்ப்பனர்கள் அனைவரும் தமிழ் விரோதி என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஆனால் தனி ஈழத்திர்கு எதிராக தமிழகத்தில் வாதாடும் எழுதும பேசும் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்?
பார்ப்பன ஜாதி சங்கத் தலைவரான சங்கராச்சாரி தமிழை நீச பாஷை அதைக் கொண்டு கடவுளை வணங்க்கஃகூடாது என்று சொல்லியும் எழுதியும் இருக்கிறார். அவர் ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தை பிரதிபலிக்கின்றாரா என்பது வேறு விஷயம் என்றாலும் இப்படி ஒரு ஜாதி சங்கத் தலைவரே பேசும் போது அதை மொழி துவேஷம் என்று புரிந்து கொள்வது தவறா?
ஜனவரி 5, 2009 at 4:25 மு.பகல்
//பார்ப்பன ஜாதி சங்கத் தலைவரான சங்கராச்சாரி தமிழை நீச பாஷை அதைக் கொண்டு கடவுளை வணங்க்கஃகூடாது என்று சொல்லியும் எழுதியும் இருக்கிறார். அவர் ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தை பிரதிபலிக்கின்றாரா என்பது வேறு விஷயம் என்றாலும் இப்படி ஒரு ஜாதி சங்கத் தலைவரே பேசும் போது அதை மொழி துவேஷம் என்று புரிந்து கொள்வது தவறா?//
ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்னும் கன்னட பலிஜா நாயுடு தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார். தமிழ் புலவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்றார். கீழ்வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு தலித்துகளை எதிர்த்தபோது அதை பூசி மொழுகினார்.
ஆக உங்கள் கணக்குப்படி ஈ.வே.ராமசாமி நாயக்கர் தமிழ் விரோதி மற்றும் நாயுடு ஜாதி வெறியர் எனக் கூறத்தானே வேண்டும்?
@ஆர்.வி.
நீங்கள் என்னதான் கரடியாக கத்தினாலும் யாரும் உங்களை பாப்பான் என ஏசுவது நிற்கப்போவதில்லை. விட்டுத் தள்ளுங்கள் இந்த ஜாட்டான்களை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜனவரி 5, 2009 at 5:48 மு.பகல்
அரை டிக்கெட்,
வினவின் பல கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். பின்னூட்டங்களும் இட்டிருக்கிறேன். பொதுவாக அவர் எண்ணங்களுடன் எனக்கு இசைவு இல்லை. குறிப்பாக மும்பை தீவிரவாதம் பற்றி அவர் எழுதும் கருத்துகள் மிக தவறானவை என்பது என் கருத்து (பொடா தடா மாதிரி சட்டங்கள் கூடாது என்பதை தவிர)
என்னங்க, பிராபாகரனின் ஃபாஸிஸத்துக்கு ரா காரணம் என்கிறீர்கள்? ராவா சிரிசபாரத்னம், உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம் ஆகியோரை கொல்ல தூண்டியது?
// பார்ப்பனர்கள் அனைவரும் தமிழ் விரோதி என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஆனால் தனி ஈழத்திர்கு எதிராக தமிழகத்தில் வாதாடும் எழுதும பேசும் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்? //
மனம் வெறுத்து சொல்கிறேன் – இதெல்லாம் ஒரு கேள்வியா? என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள், சொல்பவரின் ஜாதி என்ன, மதம் என்ன, உயரம் என்ன, தலையில் முடி இருக்கிறதா இல்லையா, கல்யாணம் ஆனவரா இல்லையா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். தமிழ் விரோதியோ இல்லையோ – எனக்கு ஒரு திருக்குறள் மிகவும் பிடித்தமானது – “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” நீங்கள் தமிழ் விரோதியா இல்லையா என்பதில் எந்த சந்தேகமும் இல்லாத நீங்களும் எப்போதாவது தமிழின் தலை சிறந்த நூல் என்று கருதப்படும் குறளை படிக்கலாம்.
// பார்ப்பன ஜாதி சங்கத் தலைவரான சங்கராச்சாரி தமிழை நீச பாஷை அதைக் கொண்டு கடவுளை வணங்க்கஃகூடாது என்று சொல்லியும் எழுதியும் இருக்கிறார். அவர் ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தை பிரதிபலிக்கின்றாரா என்பது வேறு விஷயம் என்றாலும் இப்படி ஒரு ஜாதி சங்கத் தலைவரே பேசும் போது அதை மொழி துவேஷம் என்று புரிந்து கொள்வது தவறா? //
உங்கள் மறுமொழியை கண்டதும் எனக்கும் பெரியாரின் காட்டுமிராண்டி பாஷை ஞாபகம் வந்தது. டோண்டு எழுதிவிட்டார்.
சங்கராச்சாரியார் எப்போது பிராமண சங்கத் தலைவரானார் என்று எனக்கு தெரியாது.அவர்தான் தங்கள் தலைவர் என்று 100% பிராமணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அதனால் அவர் சொல்லும் எல்லாம் சரி என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று அர்த்தமா? மொரார்ஜி தேசாயை தலைவராக ஏற்ற அத்தனை பேரும் காலையில் சிறுநீரை குடிக்கிறார்கள் என்று வாதிடுவீர்களா? ஒரு தனி மனிதர் பேசும் பேச்சுக்கு குழு அடையாளம் எப்படி கொடுக்கிறீர்கள்? கலைஞர்தான் தமிழ் நாட்டின் முதல்வர். அவர் குடும்பத்தாரே அவர் பேச்சை கேட்பதில்லை. அப்படி இருக்கும்போது சங்கராச்சாரியார் சொல்லிவிட்டார், அதனால் பார்ப்பனர்கள் தமிழ் த்வேஷிகள் என்று பேசுவது வீண் வாதம். வேண்டுமானால் சங்கராச்சாரியார் தமிழ் த்வேஷி என்று சொல்லிக்கொள்ளுங்கள். அதுவும் அவர் இதை எந்த வருஷம் சொன்னார், என்ன காண்டேக்ஸ்டில் சொன்னார் என்று தெரியாது. பெரியாரின் கீழ் வெண்மணி பேச்சுக்கே முழு காண்டேக்ச்ட் தெரிந்தால்தான் என் கருத்து மாற இடம் உண்டு என்று நினைப்பவன் நான். அதற்கு பிறகு சங்கராச்சாரியாரின் கருத்து மாறவில்லை, அவர் தமிழை பாராட்டி ஒன்றும் சொல்லவில்லை என்று நீங்கள் அறுதி இட்டு சொல்வீர்களா? “என் தலைவரின்” எழுத்துகளை நானே படிப்பதில்லை, நீங்கள் எங்கே படித்திருக்கப் போகிறீர்கள்?
டோண்டு, அடிக்கடி ஜாட்டான் ஜாட்டான் என்கிறீர்களே, அது யார் ஜாட்டான்? எனக்கு தெரிந்த ஒரே ஜாட்டான் வட இந்தியாவின் ஜாட் சாதியினர்தான்.
ஜனவரி 5, 2009 at 7:17 மு.பகல்
மூன்று நகரங்கள் என்னும் தலைப்பில் சமீபத்தில் எழுபதுகளில் தொடர்கதை வந்தது. குமுதத்தில் வந்தது. எழுதியது ரா.கி ரங்கராஜன் அல்லது எஸ்.ஏ.பி. அதில் வந்த இந்த வார்த்தைக்கு பொருள் எடுபட்ட பயல், உபயோகமில்லாத பயல் ஆகியவையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜனவரி 5, 2009 at 2:59 பிற்பகல்
// இலங்கை பிரச்சனையில் வினவு கட்டுரைகளுடன் நான் உடன்படுகிறேன்…//
அவசரப்பட்டு சொல்லிவிட்டேன். 100% இசைவு இல்லை என்றாலும் அவர் சொல்லி இருக்கும் பல கருத்துகள் எனக்கும் இசைவுதான். (வினவு கம்யூனிசத்தை நம்புபவர், நான் எந்த இசமும் 100% சரி இல்லை, ஆனால் இருக்கும் இசங்களில் காபிடலிசமே சிறந்தது என்று நினைப்பவன், எங்களுக்குள் 100% இசைவு இருந்தால்தான் அதிசயம்)
குறிப்பாக, அவர் இந்தியாவின் விடுதலை போராட்டம் ஒரு வேஸ்ட், ராஜீவ் உத்தமர் இல்லை, அதனால் அவரது கொலை சரிதான் என்ற தொனியில் எழுதியது மிகத் தவறு. கலைஞர் பதவிக்கு ஆபத்து வராமல் சும்மா சீன் காட்டுகிறார், இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்களை ஏறக்குறைய கை கழுவிவிட்டது என்ற கருத்துகள் சரிதான். புலிகளுக்கு எதிர்ப்பு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற நிலையை எப்படி செயல்படுத்துவது என்று அரசுக்கு புரியாதது ஆச்சரியமில்லை. எனக்கும் புரியவில்லை. வினவும் அதை எப்படி செய்வது என்று எந்த கருத்தும் சொல்லவில்லை.
ஒரு விஷயத்தில் தீவிர கருத்து வேறுபாடு இருந்தால் அதை வைத்து எல்லா விஷயங்களிலும் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதை மறந்த எனக்கு அதை மீண்டும் சுட்டியதற்கு நன்றி!
ஜனவரி 5, 2009 at 3:04 பிற்பகல்
// ஆனால் தனி ஈழத்திர்கு எதிராக தமிழகத்தில் வாதாடும் எழுதும பேசும் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்? //
இது for the record. நீங்கள் பார்ப்பனர் என்று சொதப்பியதால் நான் என் கருத்தை மறைக்கக் கூடாது. நான் தனி ஈழத்துக்கு எதிரானவன் அல்ல. தனி ஈழமோ, இலங்கை அரசுக்கு உட்பட்ட, ஆனால் இரண்டாம் தர குடிமகன்களாக இல்லாத அமைப்போ, விடிவுகாலம் வந்தால் சரி. ஆனால் ஃபாஸிஸ புலிகள் ஆளும் தனி நாடு என்பது ஈழத் தமிழர்களுக்கு நல்லது அல்ல.
ஜனவரி 5, 2009 at 3:27 பிற்பகல்
நிறைய பதில் சொல்லவேண்டும்…
அதற்கு முன்னர் ஒரு சிறிய விளக்கம்
ஒன்று நான் என்னுடைய கருத்துக்களை தெளிவாக சொல்லவில்லை
அல்லது நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை.
இரவு விரிவான விள்க்கமளிக்கிறேன்
ஜனவரி 5, 2009 at 3:29 பிற்பகல்
உபயோகமில்லாத பயல் சரி
அதி என்ன
எடுபட்ட பயல்
ஆர் வி உங்குளுக்கு தெறிந்தால் சொல்லுங்களேன்
ஜனவரி 5, 2009 at 8:26 பிற்பகல்
// நீங்கள் பார்ப்பனர் என்று சொதப்பியதால் //
பார்ப்பனர்கள் எந்த விதத்தில் தமிழுக்கு விரோதியாக இருக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் பார்ப்னர்களை அஜென்டாவுக்கு கொண்டு வந்த்தே நீங்கள்தான் நானல்ல.
அதைப்பற்றி எனது கருத்தை நான் நேற்று சொன்னது போலவே….
பார்ப்பனர்கள் அனைவரும் தமிழ் விரோதி என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்
என்னுடைய கேள்வி என்னவென்றால்…
தனி ஈழத்திர்கு எதிராக தமிழகத்தில் வாதாடும் எழுதும பேசும் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்?
//மனம் வெறுத்து சொல்கிறேன் – இதெல்லாம் ஒரு கேள்வியா? //
ஆர்வி நான் தமிழகத்தில் இருக்கிறேன். தகவல் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக உயிரும் சதையுமாக இங்கு இலங்கை பிரச்சனை அசை போடப்படுகிறது. ஏறத்தாழ அனைவருமே இலங்கை அரசின் பேரினவாத கொள்கையை எதிர்ப்பதும் தனிஈழத்திற்கு ஆதரவுமாய் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த பொதுக்கருத்துக்கு மாறாக எழுதியும் பேசியும் வருகிறவர்களில் சிலர்
தனது சாதிய அடையாளத்தை வெளிப்படையாக அறிவிக்கும் துக்ளக சோ, தினமலர், ஜெயல்லிதா, சு.சாமி இவர்களோடு இந்து ராம் மற்றும் தினமணி.
ஏற்கனவே பல பிரச்சனைகளில் (மதமாற்ற தடைச்சட்டம், சங்கிராச்சாரி கைது, கோவில்களில் ஆடு கோழி வெட்டத்தடை, அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆகும் உரிமை, தில்லை பிரச்சனை…) இதிலெல்லாம் இவர்களது நிலைப்பாட்டை கூர்ந்து கவனித்து வரும் மக்கள் இதிலும் இப்படி ஒரு மதிப்பீட்டுக்கு வருகிறார்கள்.
தவிரவும் சாதி என்பது இன்னமும் அனைவரது மனங்களிலிருந்து ஒழியவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். படித்தவர் முதல் பாமர்ர வரை எல்லோருக்கும் அதுதான் நிலை. இன்னமும் கலப்பு திருமணம் அறிதான நிகழ்வுதான். அரசியலும் கூட சாதி அரசியல்தான் நடக்கிறது. சோ அத்வானியையும், ச்சிகலா தேவரையும், திருமா அம்பேத்காரையும் இன்னும் ராமதாஸ், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், வைகோ….அனைவருக்கும் ஒரு சாதி, அதை வெட்கமில்லாமல் ஓட்டுவங்கி என அழைக்கும், சாதியை அடிக்கடி நினைவு படுத்தும் பத்திரிக்கைகள், சினீமா பிற ஊடகங்கள், … திருவிழா, பூஜை பிற பண்டிகைகள், கல்யாணம், உபநயன்ம் போன்ற விழாக்கள்… வின்னப்பங்கள், ஒதுக்கீடுகள், மானியங்கள்…… எங்கே இல்லை சாதி..?
இப்படி திரும்புமிடமெல்லாம் சாதி இருக்கும் போது ஒருவரை ஒருவர் சாதி ரீதியாக அடையாளம் காண்பதை தடுக்க முடியுமா? சாத்தியமே இல்லை.
இங்கே தன்னை சாதியோடு அடையாளப் படுத்திக்கொள்ளும் சங்கராச்சாரியை பற்றி நான் பேசியவுடன் வாழ்நாள் முழுவதும் சாதியை எதிர்த்தே போராடிய பெரியாரை ‘நாயக்கர்’ என விமர்சனம் செய்கிறார் நன்கு படித்தவரான டோன்டு. இதுதானே நிலை..
சாதியினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற சமூக பொருளாதார நிலை வரும்போது மட்டுமே சாதி ஒழியும். அதுவரை சாதி பார்க்காதவராயினும் இந்த சொல்லடிகளை தாங்கித்தான் ஆகவேண்டும்.
//உங்கள் மறுமொழியை கண்டதும் எனக்கும் பெரியாரின் காட்டுமிராண்டி பாஷை ஞாபகம் வந்தது. //
இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது…
பெரியார் தமிழ் தமிழ் என தொங்கிக் கொண்டிருக்காம்ல ஆங்கிலம் படித்து முன்னேரும் வழியைப்பாருங்கள் என் சொன்னதற்கும், அதற்க்காக தமிழை மட்டம் தட்டி பேசியதர்கும்..
தமிழ் சூத்திரனின் மொழி அதை கோவில் கருவரைக்குள் நுழைக்ககூடாது என மொழியிலும் சாதியத்தை புகுத்தி அதை தீண்டத்தகாத்தாக கருதிய சங்கராச்சாரியின் கருத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
//சங்கராச்சாரியார் எப்போது பிராமண சங்கத் தலைவரானார் என்று எனக்கு தெரியாது.//
சங்கர மடம்தான் தலைமைப்பீடம் என்பது அனைவருக்கும் தெறிந்த்து தானே எந்த நல்ல காரியத்திற்கான பத்திரிக்கை காமகோடிகளின் ஆசீர்வாதம் பெறாமல் அச்சடிக்கப்படுகிறது.
//அவர்தான் தங்கள் தலைவர் என்று 100% பிராமணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அதனால் அவர் சொல்லும் எல்லாம் சரி என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று அர்த்தமா? //
நான் நேற்று சொன்னது போல அவர் ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தையும் பிரதிபலிப்பதாக நான் கருதவில்லை.
//ஒரு தனி மனிதர் பேசும் பேச்சுக்கு குழு அடையாளம் எப்படி கொடுக்கிறீர்கள்//
அந்த தனிமனிதனின் பேச்சுக்கு எந்த விதமான கண்டனமும் அந்த குழுவிலிருந்து தெறிவிக்கப்படவில்லையே? மேலும் சங்கராச்சாரி ஒரு தனிமனிதரல்ல ஒரு நிறுவனம். ஒரு மத்ததின் தலைவர் அல்லவா? அவர் தமிழை சூத்திர மொழி என்று சொன்னால் அது அவரது தனிப்பட்ட கருத்து என விட்டுவிடலாமா? இன்று வரை கோவில் கருவறைக்குள் தமிழும் தமிழனும் நுழைய முடியவில்லையே?
மற்றவை நாளை…!!!
ஜனவரி 5, 2009 at 8:28 பிற்பகல்
ஒரே ஒரு கேள்வி
டோண்டு போன்றவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி..
‘எல்லா முஸ்லிமும் தீவிரவாதியில்லை ஆனால் எல்லா தீவிரவாதியும் முஸ்லிம் தான் அது ஏன்’
என்னுடைய இந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லையே…
பார்ப்பனர்கள் அனைவரும் தமிழீழ விரோதி என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஆனால் தனி ஈழத்திர்கு எதிராக தமிழகத்தில் வாதாடும் எழுதும பேசும் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்?
ஜனவரி 5, 2009 at 9:31 பிற்பகல்
திராவிட கட்சிகள் தனி தேசிய கோஷத்தை 1967ல் பதவி ஏற்கும் பொழுதே விட்டுவிட்டனர் என்றல்லவோ நினைத்தேன்…
ஆர்.வி -
கலக்குரீங்க. என்ன தான் இருந்தாலும் நாலு கேள்வி கேட்பது அவ்வளவு சுலபம் அன்று.
அர டிக்கெட் -
தமிழக பா.ஜ.கா வி.பு. மீது தடையை நீக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்.
சு.சாமி, சோ, என்.ராம் போன்றோர் தான் உங்களுக்கு பார்ப்னர்கள் என்றால் ஒன்றும் செய்ய இயலாது.
எனக்கு தெரிந்து சோ, என்.ராம் கூட தனி ஈழத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பது வேறு விஷயத்தை. அந்த விஷயத்தை கலைஞரும் எதிர்க்கிறார். ஏன் பேசினாலே கைது செய்ய உத்தரவு…
ஜனவரி 6, 2009 at 12:51 மு.பகல்
முரளி,
உங்க லோகோ இதிலே இல்லையே, இது நீங்கதானா?
ஜனவரி 6, 2009 at 3:34 மு.பகல்
//தனி ஈழத்திற்கு எதிராக தமிழகத்தில் வாதாடும் எழுதும பேசும் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்?//
ஏனெனில் அவர்கள் புலிகள் ஆதரவாளர்களின் சப்பைக்கட்டு பிரசாரத்தில் மயங்காத புத்திசாலிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜனவரி 6, 2009 at 3:41 மு.பகல்
//இங்கே தன்னை சாதியோடு அடையாளப் படுத்திக்கொள்ளும் சங்கராச்சாரியை பற்றி நான் பேசியவுடன் வாழ்நாள் முழுவதும் சாதியை எதிர்த்தே போராடிய பெரியாரை ‘நாயக்கர்’ என விமர்சனம் செய்கிறார் நன்கு படித்தவரான டோன்டு. இதுதானே நிலை.//
பெரியார் யாரை முதலில் சந்தித்தாலும் அவர் ஜாதி என்ன என்பதைத்தான் கேட்டு தெரிந்து கொள்வார். மணியம்மை கல்யாண சர்ச்சையில் பேசாமல் பெரியார் அவரை கல்யாணம் செய்து கொள்ளாது வைப்பாட்டியாக வைத்து கொள்ளலாம் என அறிஞர் அண்ணா கூறியபோது தன் ஜாதி புத்தியை காட்டிவிட்டார் அவர் என பெரியார் சீறியிருக்கிறார்.
சும்மா உதார் விடாதீர்கள் அரை டிக்கெட்டு. கீழ்வெண்மணியில் அவர் விட்ட சவசவ அறிக்கைக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறீர்கள்?
வைக்கம் போராட்டம் கூட அவர் காங்கிரசில் இருந்தபோது கட்சி நடவடிக்கையாக அவர் செய்தார் என்றாலும் அது பாராட்டுக்குரிய செயலே. ஆனால் பிறகு எத்தனை முறை தலித்துகளுக்காக போராடி இருக்கிறார்? இரட்டைக் குவளை முறைக்கு என்ன செய்தார் அவர்? ஏதேனும் ரிகார்டுகள் இருந்தால் எடுத்து விடுங்களே பார்ப்போம். உண்மை கூறப்போனால் தலித்துகளை பார்ப்பனர் அல்லாத மற்ற உயர்சாதியினர் வன்கொடுமை செய்ததை அவர் கண்டு கொண்டு போராட்டம் எதுவும் நடத்தியதாகத் தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜனவரி 6, 2009 at 5:58 மு.பகல்
//எனக்கு தெரிந்து சோ, என்.ராம் கூட தனி ஈழத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பது வேறு விஷயத்தை??
அவர்கள் தனிஈழத்தை எதிர்க்கிறார்கள். இதில் இந்து ராம் சோவை விடவும் மோசமாக நடந்து கொள்கிறார்.
//சு.சாமி, சோ, என்.ராம் போன்றோர் தான் உங்களுக்கு பார்ப்னர்கள் என்றால் ஒன்றும் செய்ய இயலாது//
எனது பதிலை முழூமையாக படிக்கவும்…
//திராவிட கட்சிகள் தனி தேசிய கோஷத்தை 1967ல் பதவி ஏற்கும் பொழுதே விட்டுவிட்டனர் என்றல்லவோ நினைத்தேன்//
சுபவீ போன்றவர்கள் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலில் வராத திராவிட கட்சிகள். அதனால் அவர்கள் இதை பேச இயலும்.
ஜனவரி 6, 2009 at 6:15 மு.பகல்
டோண்டு உங்கள் மீது நான் வைத்த விமரிசனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வதைப்போல் உள்ளது உங்கள் பதில்.
பரவாயில்லை
தனது வாழ்நாலில் பெரியாரைப் போல கல்லடியும் சொல்லடியும் வாங்கிய தலைவர் இல்லை. இறந்த பின்னரும் நிலை அப்படியே.
அவரை பற்றிய பல மோசமான அவதூறுகள் அவர் வாழ்ந்த போதே எதிர்கொண்டவர். அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாதவர்.
அவரை பற்றிய பல அவதூறுகள் அடங்கிய புத்தகமான ‘ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ எனும் நூல் உங்களுக்கு உதவக்கூடும். படித்துவிட்டு விட்டுப்போயிருக்கும் சில விஷயங்களையும் நீங்கள் எல்லோருக்கும் அறியத் தரலாம். என்னை பொருத்தவரை சங்கராச்சாரியை விட பெரியார் தமிழுக்கும் தமிழனுக்கும் அதிகமாக நன்மை செய்திருக்கிறார்.
நிற்க
பார்பனர்களின் தமிழ் துவேஷிகளா என்ற ஆர்வியின் கேள்விக்கு நான் பதலளிக்கும் வேளையில் சற்றும் சம்மந்தமே இல்லாமல் பெரியாரையும் சாதியையும் புகுத்தி விவாத்ததை நீங்கள் ஏன் திசை திருப்பு முயலுகிறீர்கள்?
ஜனவரி 6, 2009 at 7:33 மு.பகல்
அரை டிக்கெட்,
1. // டோண்டு போன்றவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.. – ‘எல்லா முஸ்லிமும் தீவிரவாதியில்லை ஆனால் எல்லா தீவிரவாதியும் முஸ்லிம் தான் அது ஏன்’//
டோண்டு இப்படி சொல்லி நான் படித்ததில்லை. அவர் அப்படி எல்லாம் சொல்ல மாட்டார் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. அவர் அப்படி சொல்லியிருந்தாலும் இதே கடுப்புதான் கிளம்பி இருக்கும்.
நீங்கள் இப்படி பார்ப்பனர்களை பற்றி சொன்னதைத்தான் நான் சொதப்பல் என்று குறிப்பிட்டேன். என் கருத்தை விடுங்கள். இப்படி யாராவது முஸ்லிம்களை பற்றி சொல்வது உங்கள் பார்வையில் சரியா தவறா? சரி என்றால் அதை பற்றி நான் மேலும் பேச வேண்டி இருக்கும். தவறு என்றால் பார்ப்பனர்களை பற்றியும் அப்படி எழுதாதீர்கள்.
2. // பார்ப்னர்களை அஜென்டாவுக்கு கொண்டு வந்த்தே நீங்கள்தான் நானல்ல. // பார்ப்பனர்கள் என் அஜெண்டாவில் பல நாளாக இருக்கிறார்கள். என் ஆட்சேபம் பார்ப்பனர்களை பற்றி பேசுவதற்கல்ல, சொதப்புவதற்கு.
3. // பார்ப்பனர்கள் அனைவரும் தமிழ் விரோதி என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் //
இது ஒரு மாதிரியான ஸ்டேட்மென்ட். வக்கீல் “நான் கேட்பதற்கு ஆமாம்/இல்லை என்று மட்டுமே பதில் சொல்ல வேண்டும், நீ திருடுவதை நிறுத்திவிட்டாயா?” என்று கேட்டாராம்.
நீங்கள் பெரியாரை மதிக்கிறீர்கள். நாயக்கர்கள் அனைவரும் புரட்சியாளர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வீர்களா? இப்படி சொன்னால் என்ன அர்த்தம்? சில நாயக்கர்கள் புரட்சியாளர்கள் இல்லை, ஆனால் பொதுவாக அப்படித்தான் என்றுதானே?
4. // தனி ஈழத்திர்கு எதிராக தமிழகத்தில் வாதாடும் எழுதும பேசும் அனைவரும் பார்ப்பனர்களாக இருப்பது ஏன்? //
மீண்டும் சொல்கிறேன் – யார் சொல்வது என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
5. // இந்த பொதுக்கருத்துக்கு மாறாக எழுதியும் பேசியும் வருகிறவர்களில் சிலர் தனது சாதிய அடையாளத்தை வெளிப்படையாக அறிவிக்கும் துக்ளக சோ, தினமலர், ஜெயல்லிதா, சு.சாமி இவர்களோடு இந்து ராம் மற்றும் தினமணி. //
இப்படியும் சொல்லலாம். சோ, ஜெ, சு.சாமி, ராம் ஆகியர்களுக்கு ஐம்பது வயதாவது இருக்கும். “பொதுக்கருத்துக்கு” மாற்றான கருத்து சொல்பவர்கள் எல்லாரும் ஐம்பதுக்கு மேற்பட்ட கிழங்களாகவே இருப்பது ஏன் என்று கேட்கலாம். இல்லை “பொதுக்கருத்து” சொல்லும் வைகோ, நெடுமாறன், எல்லாரும் ஆண்களாகவே, இல்லை ஹிந்துக்களாகவே, இருப்பது ஏன் என்று கேட்கலாம். இரங்கல் கவிதை எழுதுபவர் எல்லாம் ஏன் மஞ்சள் துண்டு அணிபவர்களாகவே இருக்கிறார்கள் என்று கேட்கலாம்.
பார்ப்பனர் அல்லாத காங்கிரஸ்காரர்கள் எல்லாரும் – இளங்கோவன், ஞானசேகரன், சுதர்சனம் – தனி ஈழம் வேண்டும் என்று சொல்கிறார்களா? வினவு எழுதுவதை வைத்து நான் வேறென்னவோ நினைத்தேன். நீங்கள்தான் விளக்க வேண்டும்.
6. // ஏற்கனவே பல பிரச்சனைகளில் (மதமாற்ற தடைச்சட்டம், சங்கிராச்சாரி கைது, கோவில்களில் ஆடு கோழி வெட்டத்தடை, அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆகும் உரிமை, தில்லை பிரச்சனை…) //
a. ஹிந்து ராம் மத மாற்ற தடை சட்டம் சரி என்று சொன்னாரா? நிஜமாகவா?
b. சங்கராச்சாரியாரை கைது செய்ததே ஜெதானே?
c. ஆடு கோழி வெட்டக் கூடாது என்று ஹிந்து ராம் சொன்னாரா?
d. ஜெ, சோ, ராம் அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று சொல்கிறார்களா? நம்ப முடியவில்லையே?
e. இவர்கள் சிதம்பரத்தில் தேவாரம் பாடக் கூடாது என்று சொல்கிறார்களா?
f. நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். என் மனதில் இவர்களுக்கு இருக்கும் இமேஜ் படி இப்படி சொல்லி இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் எனக்காக ஒரு முறை டபிள்செக் செய்யுங்களேன்!
7. // இப்படி திரும்புமிடமெல்லாம் சாதி இருக்கும் போது ஒருவரை ஒருவர் சாதி ரீதியாக அடையாளம் காண்பதை தடுக்க முடியுமா? சாத்தியமே இல்லை. //
மன்னிக்கவும், உங்கள் ஜாதி என்ன என்று யாராவது இங்கே கேட்டார்களா? நீங்கள் எந்த ஜாதியாக இருந்தால் எனக்கு லாபம்? இந்த தளத்தில் உங்கள் அடையாளம் ஜாதி ரீதியானதுதானா? ஜாதி பிரக்ஞை ஒழியவில்லைதான். ஆனால் அதை நீங்களும் நானும் ஏன் அனாவசியமாக தேட வேண்டும்? சோவின் ஜாதியை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? கலைஞர் கவுண்டராக இருந்தால் வீரனாகி விடுவாரா? ஜெ தலித்தாக இருந்தால் சர்வாதிகாரியாக இருக்க மாட்டாரா? எம்ஜிஆர் பிராமணராக இருந்தால் நல்ல நிர்வாகியாகி விடுவாரா?
8. பெரியார் கவுண்டராக இருந்தாலும் டோண்டு அப்படியேதான் சொல்லி இருப்பார். அவர் உங்கள் லாஜிக்கை வேறு ஒரு காண்டேக்ஸ்டில் பொருத்தி அது சரி வரவில்லை என்று காண்பித்தார், அவ்வளவுதான்.
9. // அதுவரை சாதி பார்க்காதவராயினும் இந்த சொல்லடிகளை தாங்கித்தான் ஆகவேண்டும். // என்னங்க, எனக்கு ஏதாவது வேண்டுதலா?
10. நீங்கள் பெரியாரின் காட்டுமிராண்டி பாஷைக்கு காண்டேக்ச்டை விளக்குகிறீர்கள். சங்கராச்சாரியார் என்ன காண்டேக்ஸ்டில் சொன்னார் என்று எனக்கு தெரியாது என்று நான் ஏற்கனேவே சொன்னேன். உங்களுக்கு தெரிந்தால் அதையும் சொல்லுங்கள்.
11. // எந்த நல்ல காரியத்திற்கான பத்திரிக்கை காமகோடிகளின் ஆசீர்வாதம் பெறாமல் அச்சடிக்கப்படுகிறது. // ஒத்துக்கொள்ள வேண்டிய பாயிண்ட்தான்.
12. // அந்த தனிமனிதனின் பேச்சுக்கு எந்த விதமான கண்டனமும் அந்த குழுவிலிருந்து தெறிவிக்கப்படவில்லையே? //
இது கொஞ்சம் டூ மச். அவர் எப்போது சொன்னார், என்ன சொன்னார் என்பது பிராமணர்களை விட கலைஞருக்குத்தான் அதிகம் தெரியும். லட்சத்தில் ஒரு பிராமணன் கூட அவருடைய தத்துவ நோக்கை அறியமாட்டான். ஜயேந்திர சரஸ்வதிக்கே தெரியுமோ தெரியாதோ?
கலைஞர் மாசத்துக்கு மூணு முறை ஏதாவது பிராமண வெறுப்பு கமென்ட் அடிக்கிறார். அதை எல்லா பாதிரிகையிலும் போட்டு தாக்குகிறார்கள். தி.மு.க. சங்கர மடத்தை விட பெரிய நிறுவனம். எந்த தி.மு.க.காரனும் அதை எதிர்த்து எந்த காலத்திலும் ஒரு வார்த்தை சொன்னதில்லை. தி.மு.கவினர் எல்லாரும் பிராமணர்களை வெறுக்கிறார்களா?
மொரார்ஜி தேசாயின் ஒரு சிஷ்யன் கூட சிறுநீரை குடிப்பது பைத்தியக்கரத்தனம் என்று சொன்னதில்லை. எல்லாரும் குடித்தார்கள் என்று அர்த்தமா?
பெரியார் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னதை எந்த திராவிட கட்சிக்காரன் ஆட்செபித்திருக்கிறான்? செம்மொழி, பச்சை மொழி புராணம் பாடும் கலைஞர் கூட ஒரு வார்த்தை சொன்னதில்லை.
ஜனவரி 6, 2009 at 7:56 மு.பகல்
அருமையான பதில் இரவு உங்களுக்கு விடையளிக்கிறேன்…
இன்று ஆஃபீஸில் ஆணிகள் அதிகம்…
ஜனவரி 6, 2009 at 8:01 மு.பகல்
டோண்டு,
பெரியார் ஜாதி பிரக்ஞை உள்ளவர் என்று எழுதி இருந்தீர்கள். இதில் என்ன ஆச்சரியம்? 1880இல் பிறந்தவருக்கு இந்த பிரக்ஞை இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். இந்த பிரக்ஞை இருந்தும் அவர் ஜாதியை ஒழிக்க முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் அடைந்தது பெரிய விஷயம்.
இதே கால கட்டத்தில் பிறந்த திரு.வி.க. தன் சுய சரிதையில் அத்தனை பேரையும் ஜாதி விகுதி வைத்துதான் குறிப்பிடுகிறார். (ஜாதி வேறுபாடு பார்க்காதவர் என்று அவர் சொல்லும் மனிதர்களில் பெரியாரும் ஒருவர்.) அதனால் திரு.வி.க.வை ஜாதி பார்ப்பவர் என்று சொல்ல முடியுமா? 1950களில் அப்படித்தான்.
உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ – சோவை எழுபதுகளில் ஒருவர் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று ஜாதி பேர் வைத்து சொல்கிறீர்களே என்று கேட்டார். அவர் நாயக்கர் என்று சொல்லாவிட்டால் மரியாதை இல்லாமல் அழைப்பது போல் இருக்கிறதே என்று சொன்னார். இதை துக்ளக்கில் நானே படித்திருக்கிறேன்.
மற்றபடி அவர் வைக்கத்துக்கு பிறகு ஏன் தலித்களுக்காக ஒரு போராட்டமும் நடத்தவில்லை என்பது நல்ல கேள்வி. நீங்கள் கேட்கும் முன் எனக்கும் தோன்றவில்லை. அரை டிக்கெட், உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
கீழ் வெண்மணி கமெண்ட்களின் காண்டேக்ஸ்டை அரை டிக்கெட் ஆளுமைகள் விமர்சனங்கள் என்ற பதிவில் ஒரு மறுமொழியில் விளக்கி இருக்கிறார். அது அவருக்கும் தவறுதான் என்பதையும் சொல்லி இருக்கிறார்.
ஜனவரி 6, 2009 at 1:56 பிற்பகல்
//முரளி,
உங்க லோகோ இதிலே இல்லையே, இது நீங்கதானா?//
Yes. You can check my e-mail address in your comments admin page. WordPress does not show the logo if I don’t login.
Thanks for checking, RV.