நான் ஒரு அரைக் கிழம் (என்ன வயது என்று சொல்லாமல் இருக்க இது ஒரு வழி). நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன். எனக்கு ஜாதியை பற்றி பிரக்ஞை அவ்வளவாக இருந்ததில்லை. என் நண்பர்கள் பாதி பேர் என்ன ஜாதி என்று தெரியாது. மீதி பேர் ஜாதி தெரிந்ததும் யதார்த்தமாக நடந்ததுதான். லங்கோட்டி யார்களான சஞ்சய் மால்பானி, தங்கமணிமாறன், ஸ்ரீகுமார், சிவகுருநாதன், வி. சங்கர், கணேஷ் கனக சுந்தரராஜ், இவர்களெல்லாம் என்ன ஜாதி என்று தெரியாது. தெரிந்துகொள்ளக்கூடாது என்பதில்லை – தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும் இல்லை. எனக்கு என் ஜாதியை பற்றி பிரக்ஞை வந்ததெல்லாம் நான் எஞ்சினியரிங் சீட் அடித்துப் பிடித்து வாங்கியபோதும் வீட்டு கல்யாணங்களின் போதும்தான். எல்லாரும் இப்படித்தான் என்று நான் சொல்லவில்லை. எனக்கு தெரிந்த முக்கால்வாசி பேர் இப்படித்தான். நான் பெரிய உத்தமன் என்பது இல்லை – இதுதான் நான் பார்த்த, எனக்கு தெரிந்த அரை நகர வாழ்க்கை முறை.
ஜாதி பற்றிய பிரக்ஞை உள்ளவர்களும் மற்ற ஜாதியை ஒதுக்கியவர்கள் இல்லை – சுய ஜாதி அபிமானம் உள்ளவர்கள். அதுவும் நான் தமிழ் நாட்டுக்கு வெளியே இந்தியாவில் ஐந்து வருஷம் இருந்திருக்கிறேன். தமிழ் பேசினால் நீ நண்பன். இந்தியாவை விட்டு வந்து பதினாறு வருஷம் ஆயிற்று. நீ இந்தியன் என்றால் சந்தோஷம். இந்த மாதிரிதான் தமிழ் நாட்டில் சுய ஜாதி அபிமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு நினைப்பு.
சமீப காலமாகத்தான் நான் தமிழ் ப்ளாக்களை படிக்கிறேன். எனக்கு நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்பதை நினைவுபடுத்துகிறார்கள். கொஞ்சம் பேருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பதை விட நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்பதுதான் முக்கியமாகத்தான் தெரிகிறது என்று தோன்றுகிறது. இதனாலேயே நான் எந்த பதிவுக்கு பதில் எழுதினாலும் நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்று இப்போதெல்லாம் முதலில் சொல்லி விடுகிறேன். அவர்களுக்கும் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படிக்கும் வேலை மிச்சம்.
இவர்கள் அனைவரும் கலைஞர் மாதிரி நாங்கள் பார்ப்பநீயத்துக்குத்தான் எதிரிகள், பார்ப்பனர்களுக்கு அல்ல என்று அவ்வப்போது சொல்லிக்கொள்வார்கள். பிறந்த ஜாதிதான் சமூகத்தில் உனக்கு என்ன இடம் என்று தீர்மானிக்கிறது என்ற கருத்தைத்தான் இவர்கள் பார்ப்பனீயம் என்று சொல்கிறார்கள். (சிலர் ஹிந்து தீவிரவாதத்தையும் பார்ப்பனீயம் என்று சொல்கிறார்கள்.) ஒரு குழுவுக்கு பார்ப்பனர்கள் என்று அடையாளம் வைத்துவிட்டு, ஒரு கருத்துக்கு பார்ப்பனீயம் என்று அடையாளம் வைத்தால், அந்த குழு பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் வரவில்லையா? உலகெங்கும் பல தீவிரவாத தாக்குதல்கள் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. யாராவது தீவிரவாதத்தை இஸ்லாமியம் என்று சொல்லுவீர்களா? தமிழ் நாட்டில் ஜாதி தாக்குதல்கள் முக்கால்வாசி தேவர் ஜாதியினரால் நடத்தப்படுகின்றன – யாராவது ஜாதி தாக்குதல்களை தேவரியம் என்று சொல்லுவீர்களா? ஜாதீயம் என்ற வார்த்தை இருக்கும்போது எதற்காக பார்ப்பனீயம் என்று சொல்ல வேண்டும்?
கலகம், வினவு, மதிமாறன் போன்றவர்கள் புத்திசாலிகளாக தெரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு பிராமண எதிர்ப்பு என்பது ஜாதியை ஒழிப்பதை விட முக்கியமோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது. கலகம் காலையில் ட்ராஃபிக் ஜாம் ஆனால் இது பார்ப்பன சதி என்று சொல்வார் போலிருக்கிறது. வினவு பாகிஸ்தானிகள் பம்பாயை அடித்தால் இதற்கு பார்ப்பனீயம்தான் காரணம் என்கிறார். கலகம் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை – ஆனால் தான் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லாவிட்டால் நான் ஜனநாயகவாதி இல்லை என்கிறார். மறுமொழி எழுதுபவர்களும் இப்படித்தான். வெங்கட் என்பவர் சில பார்ப்பனர்கள் ஜாதி பார்ப்பதால் நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம், அது எல்லா பார்ப்பனர்களையும் எதிர்ப்பது போல் தெரிகிறது என்கிறார். சூப்பர்! கூடிய சீக்கிரமே அவர் தேவர் ஜாதியினர், முஸ்லிம்கள் எல்லாரையும் எதிர்ப்பது போல் தெரியும் என்று நினைக்கிறேன். தாமிரபரணி என்பவர் பார்ப்பனர்களுக்கு இந்த அடி போதாது என்கிறார். என் ஐந்து வயது பெண் என்ன பாவம் செய்தாள்? அவளை அடிக்க கை ஓங்கினால் கை இருக்காது என்று சொல்லிவிடுகிறேன்.
ஜாதீய கோட்பாடுகளை அழியுங்கள். நானும் உடன் வருகிறேன். ஆனால் பார்ப்பனர்களை அவர்கள் பிறந்த ஜாதிக்காக எதிர்ப்பது reverse casteism. நீங்கள் பிறந்த ஜாதி உங்கள் இடத்தை தீர்மானிக்க கூடாது என்று சொல்லிக்கொண்டே பார்ப்பனர்களாக பிறந்தவர்களை எதிர்ப்பது sheer hypocrisy!
பெரியாரை பற்றி அடுத்த போஸ்டில்.
December 22, 2008 at 10:27 மு.பகல்
100 percent true. i support what you had written.
December 22, 2008 at 8:26 பிற்பகல்
ம.க.இ.க வினர் இப்பொழுது தமிழ் வெர்ட்பிரஸ் மற்றும் பிளாக் ஸ்பாட்டில் எழுதி வருகிறார்கள். ஏன் ஒர்குட் தளத்திலும் பலரைத் திட்டித் தீர்கின்றனர்.
ம.க.இ.க வின் மறைமுக தலைமை CPM [ML] [SOC]. இவர்கள் நடத்தும் பதிப்புகளே புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம்.
இவர்களின் கொள்கைகளைப் பற்றி அறியமுடியாது. கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.
இவர்களது அரசியல் பற்றி அறிய விரும்பினால் ம.க.இ.க என்று கூகிளில் தேடவும். அதில் முதலில் வரும் சந்திப்பு பதிவினைப் படிக்கவும்.
இவர்கள் சாமானியர்கள் அல்ல, ஒர் அரசியல் அமைப்பு.
December 23, 2008 at 3:04 மு.பகல்
Thanks, Murali & cybersimman!
December 23, 2008 at 3:42 மு.பகல்
well said! go ahead!
kamala
December 23, 2008 at 4:31 மு.பகல்
Yes.I entirely agree with You.The so called Progressive minds are polluted and hence they can not see clearely about present generation
Brahmins outlooks,sufferings etc. They can only
propagate Hate compaign because that is the only way they were taught & don’t look the reality. Let us moove forward ignoring their Comments.Nobody can prevent us our progress.
S.Kannan.
December 23, 2008 at 6:35 மு.பகல்
Thanks, Kalyanakamala & Kannan!
December 23, 2008 at 9:40 பிற்பகல்
Hello,
I cannot express the feelings when I read your post. I felt like it read my mind. Thanks for your post.
Me too, having grown up in 100% non-Brahmin community, having interacted with friends including Muslims – it is really irritating and tired when I hear this hate campaign for no reason.
I grew up in Erode – where the DK and such activism are deep rooted. I have never felt things differently there but now – in the virtual street where all of us inhabit, it is really sickening to see so many irrational voices. Me, personally always am open for valid criticism – because that is what teaches us to change the old established ways –but not the mindless hate that is being eschewed by some bloggers.
If an opinion is expressed in a blog, it is natural that every one of us has different thoughts and some of us may or may not agree with the expressed thought in the blog. Fair enough – if they have valid arguments let them place it in the table. Merely using the comments section for abusing about caste affiliations, or trying to cast aspersions based on the blogger caste, and/or using other tactics to make the blogger shun the blogging activity itself – is highly condemnable/regrettable to say the least. As such these folks are terrorizing people who do not fall in line.
All these folks have some sort of complex built in their mind. Else they will not exhibit this obsessive compulsive hate behavior. What do they want – everyone would write/blog the same feelings/opinions/thoughts like them? They why different people are they writing their own blogs – one person/blog is enough – since there is anyway no different thought process.
Of late, I have stopped reading such people’s blogs and the “comments” they write in other’s blogs as one cannot gain anything by way of either knowledge or entertainment – which is why most of us come to blogs. These comments are akin to Kuzhayadich Chandai, which all of us have seen innumerable times when I was in TN. At least that has some purpose which is worth fighting for!!!
Infact Tamilmanam and WordPress – both have been plagued by these folks. They cry hoarse that everyone should be treated equally – but they do not treat the same way when they come across. Surprising indeed.
Let us ignore and proceed as we have done so far…
Thanks
வெங்கடராகவன்
December 23, 2008 at 10:08 பிற்பகல்
Venkat,
Glad to know that you feel the same way. Thanks for your sharing your experiences!
December 28, 2008 at 1:31 மு.பகல்
எனது வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவில் நான் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். அதற்கான பின்னுட்டங்கள்ஐ பார்க்க இங்கு செல்லவும்: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
“என்னை பார்ப்பன வெறியனாகவே பலரும் சித்தரித்து வந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் நான் என் ஜாதியை வெளிப்படையாகக் கூறியதே ஆகும். அவ்வாறு நான் முதல் முறையாக தமிழ்மணத்தில் கூறியதன் பின்புலனை இப்போது இங்கு பார்க்கலாம்.
எல்லாம் எழுத்தாளர் அசோக மித்திரன் அவர்கள் அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியிலிருந்து ஆரம்பித்தது. அதில் அவர் தமிழகத்தில் பார்ப்பனர் நிலையைப் பற்றி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஈஸ்வர பிரசாத் அவர்களின் வலைப்பூவில் அசோக மித்திரன் கூறியது பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. அதில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
“பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுபடுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். “அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது” என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?
இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். மூன்று மூன்று மாணவர்களாக ஒரு குழுவை உருவாக்கி நேர்க்காணல் நடந்தது. என்னுடன் கூட வேறு இருவர் நேர்க்காணப்பட்டனர். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், “நீங்கள் பார்ப்பனரா?” என்று.”ஆம் ஐயா” என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?” என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் “நிச்சயமாக ஐயா” என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். “அடப் போடா மயிரே போச்சு” என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை.
இதிலிருந்து ஒரு பாடம் கற்றேன். பயப்படக்கூடாது. இப்போதுத் திரும்பிப் பார்க்கிறேன். இவ்வளவு ஆண்டுகளும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். தேவையில்லாது மற்றவர் ஆதரவை எதிர்ப்பார்த்தால் கடைசியில் அவமானம்தான் மிஞ்சும். செயலாற்றும்போது மற்றவர் அனுமதியையெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். என் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் நானே பொறுப்பு. மற்ற எந்த ஜாட்டானும் எனக்குப் பொருட்டல்ல.
நாய்கள் துரத்தினால் ஓடாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள். அவை ஓடி விடும். இந்தப் பாடம் கற்றுக் கொண்டு உலகுக்குத் தெரிவித்தது விவேகானந்தர் அவர்கள்.”
இப்போது வலைப்பூவில் பார்க்கிறேன். எழுதுபவனின் ஜாதியைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். “கமலின் நடிப்பு எனக்குப் பிடிக்கும், அவருக்கு வாரிசாக மாதவனையும் அரவிந்தசாமியையும் பார்க்கிறேன்” என்று வெங்கடேஷ் எழுதப் போக, “ஆஹா அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால்தான் இவ்வாறுக் கூற முனைந்தீரா” என்றுத் தோள் தட்டிக் கொண்டு வந்தார் ஒருவர். ஒரு பின்னூட்டம் இட்ட என்னை “நீங்கள் வடகலையா அல்லது தென்கலையா” என்றுக் கேட்டதாலேயே நான் வடகலை என்று உண்மையைக் கூற என்னமோ நான்தான் அதை முதலில் கூறியது போல கேட்டவர் திரித்து எழுத “நீங்கள் கேட்டதால்தான் கூறினேன்” என்று நான் கூறியதை அந்த மனிதர் கவனிக்கவேயில்லை.
அதே போல என்றென்றும் அன்புடன் பாலா வீட்டிற்குச் சென்ற போது எனக்கு ஏற்பட்ட ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறப்போக, “நீங்கள் பார்ப்பனரானதால்தான் அவ்வாறு கண்டு பிடிக்க முடிந்தது” என்றுத் தேவையின்றி சாதியை இழுத்தார் இன்னொருவர். அதற்கும் மேலாக பார்ப்பனர்கள் தங்கள் சாதியை எப்படியாவது வெளிப்படையாக்குகிறார்கள் என்ற நக்கல் வேறு.
இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்”.
பார்ப்பனீயம் என சொல்பவர்கள் சொல்லட்டும். அதை மக்குத்தனமாக ஏற்று சில பார்ப்பனர்களே பேசுவதுதான் அபத்தம். இப்படியெல்லாம் பேசினால் தாங்கள் முற்போக்கானவர்கள் என சில (காலணாவுக்கு பிரயோசனமில்லாத) இணைய தாசில்தார்கள் ஒப்பு கொள்வார் என நினைக்கிறார்கள். அவர்களை எப்போதுமே மற்ற சாதியினர் ஒப்பு கொள்ள மாட்டார்கள். தேவையானால் “நீயும் பாப்பான்தானே” என்று கூறி மட்டம் தட்டுவார்கள். எனது மேலே சொன்ன பதிவு அம்மாதிரியான பார்ப்பனர்களைத்தான் குறி வைத்து வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
December 28, 2008 at 2:59 மு.பகல்
எனக்கு இந்த போஸ்ட் ஞாபகம் வருகிறது – நான் கூட இதை பார்த்துவிட்டு “எல்லாம் சரிதான், பார்ப்பனர் என்பதில் என்ன பெருமை என்றுதான் புரியவில்லை” என்று மறுமொழி எழுதி இருந்தேன். பெரியாரின் தாக்கம் தமிழ் நாட்டில் ஜாதி வெறியை குறைத்துள்ளது என்று நான் நினைத்தாலும் அவர் விதைத்த பிராமண வெறுப்பு என்ற விஷயம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
December 28, 2008 at 1:43 பிற்பகல்
I’m a newbie to Tamil Blogosphere. After seeing the anti-Brahmins stance being the one and only common language used everywhere, I fear the pollution exploded from Erode is far nastier and stinkier than I thought.
December 28, 2008 at 4:11 பிற்பகல்
Mukkodan,
I think the mail focus for many of these people is reducing casteism. However, it feels like the anti-brahmin sentiment is at least as important as being anti-casteist, if not more.
I think it is a very small group, numberwise. But it is a very vocal group, especially in the Tamil blog world. After all, DK is not effective at all nowadays. DMK has diluted their anti-brahmin stand though Kalaignar would make occasional noises about “avaal” and “savaal” now and then.
December 29, 2008 at 8:03 மு.பகல்
//ம.க.இ.க வின் மறைமுக தலைமை CPM [ML] [SOC]. இவர்கள் நடத்தும் பதிப்புகளே புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம்//
மிஸ்டர் முர்ளி, உங்கள் நன்பனை எனக்குத் தெறியாது என்று வைத்துக்கொள்வோம் அதைபற்றி முர்ளியின் இரகசிய நன்பன் என எழுதினால் எவ்வளவு காமெடியோ அது போல் உள்ளது உங்கள் கிசு கிசு பிரச்சாரம்.
உங்களுக்கு தெறியாது என்றால் அது மறைமுகமா???
//இவர்களின் கொள்கைகளைப் பற்றி அறியமுடியாது. கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்//
நீங்கள் எந்த தளத்தில் கேட்டு எந்த தளத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதை ஆதாரத்தோடு விளக்கமுடியுமா?
எனக்கு தெறிந்த வரையில் ம.க.இ.கவைப்போல வெளிப்படையான அமைப்பு கிடையாது. தனது வீட்டு முகவரியை அளித்து கட்சி நடத்தும் துணிவுள்ளவர்கள் மகஇகவினர். இவர்களின் செயல்பாட்டினால் அம்பலப்பட்டுபோகும் CPIM சந்திப்புகளின் புரட்டுகளை நம்பி நீங்கள் ஏமாறுவது உங்கள் உரிமை…!!!
மக இகவினரை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை வாசியுங்கள்…
http://vinavu.wordpress.com/2008/12/24/cpim3/
இதில் ஏன் CPIM போன்றவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்பதையும் அறியமுடியும்
அவர்களை பற்றிய உங்களது விமர்சனங்களை அவர்களின் தளங்களில் சொல்லுங்கள்…
இதற்கு பதிலளித்து ஆர்வியின் பதிவின் நோக்கத்தை பாழ் செய்யவேண்டாம்
உங்கள் விவரத்தில் இருந்த பிழையை சுட்டிக்காட்டவே இங்கு பதிலளிக்கிறேன்.
December 29, 2008 at 8:16 மு.பகல்
அரை டிக்கெட்,
முரளி கேட்டாரோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் நான் கேட்டிருக்கிறேன். வினவு பதில் அளிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். கலகம் என்னை கேள்விகள் கேட்டு அவற்றுக்கு நான் பதில் அளிக்காவிட்டால் நான் ஜனநாயக விரோதி என்று சொல்லி இருக்கிறார் – என் ஒரு கேள்விக்கும் அவர் இது வரை பதில் அளிக்கவில்லை. என் பதில்களையும் அவர் பார்த்தாரா தெரியாது.
December 29, 2008 at 8:55 மு.பகல்
எனக்கு தெறிந்த வரை
இஸ்ரேலியர்கள் வேறு ஜியோனிஸ்டுகள் வேறு…
முஸ்லீம்கள் வேறு இஸ்லாமிய சர்வதேசியம் வேறு…
கிறுத்துவர்கள் வேறு நாஜிகள் வேறு…
வெள்ளையர்கள் வேறு க்ளு கிளாக்ஸ் கிளான் வேறு…
பார்ப்பனீயம் வேறு பார்பனர்கள் வேறு…
சாதீயம்தான் பார்ப்பனியம்.
அதை ஏற்றுக் கொண்டவர்கள் எந்த சாதியாயினும் பார்ப்பனர்களே..
அதை நிராகரிப்பவர்கள் பார்ப்பன சாதியை சேர்ந்தவராயிருப்பினும் பார்பனர் அல்லர்!
December 29, 2008 at 1:10 பிற்பகல்
எனக்கு தெரிந்ததை சொன்னேன்…
ம.க.இ.க யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களது தளத்திற்கு முழுக்குப் போட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன…
December 29, 2008 at 6:28 பிற்பகல்
அரை டிக்கெட்,
நீங்கள் பார்ப்பனர் என்ற பழக்கத்தில் உள்ள வார்த்தைக்கு புது definition கொடுக்கலாம். அதை அடுத்தவர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஒவ்வொருவரும் பார்ப்பனர் என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது அதை அரை டிக்கெட்டின் definition படி சொல்கிறாரா, இல்லை பழக்கத்தில் உள்ள definition படி சொல்கிறாரா என்று கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? போஸ்டில் சொன்னபடி ஒரு குழுவுக்கு பார்ப்பனர் என்று பெயர்; ஒரு கோட்பாட்டுக்கு பார்ப்பனீயம் என்று பெயர் என்றால் அந்த குழு அந்த கோட்பாட்டை கடைப்பிடிக்கிறது என்று பொருள் வராதா?
சரி நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொள்வோம். உங்கள் சொல்லாட்சி ஒரு குழுவை புண்படுத்துகிறது. அதை மாற்றிக்கொள்வது நல்லது இல்லையா? பறையன் என்ற சொல்லாட்சி புண்படுத்தியதால் அது ஹரிஜன் என்று மாற்றினார்கள். நானெல்லாம் வளர்ந்துவரும்போது ஹரிஜன் என்றுதான் சொன்னோம். அது மீண்டும் அந்த குழுவை புண்படுத்தியதால் இப்போதெல்லாம் தலித் என்று சொல்கிறோம் – எனக்கு பழக்கத்தினால் சாதாரணமாக ஹரிஜன் என்றுதான் சொல்ல வருகிறது, இருந்தாலும் சர்வ ஜாக்கிரதையாக அதை என் மனதிலேயே மொழிபெயர்த்து தலித் என்று சொல்கிறேன். அடுத்தவர்களை தேவை இல்லாமல் புண்படுத்துவதில் எனக்கு என்ன மகிழ்ச்சி? உங்களுக்கும் அந்த courtesy இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?
நீங்கள் // சாதீயம்தான் பார்ப்பனியம். அதை ஏற்றுக் கொண்டவர்கள் எந்த சாதியாயினும் பார்ப்பனர்களே. அதை நிராகரிப்பவர்கள் பார்ப்பன சாதியை சேர்ந்தவராயிருப்பினும் பார்பனர் அல்லர்! // என்று எழுதி இருப்பதையே paraphrase செய்து “தீவிரவாதம்தான் இஸ்லாம். தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எந்த மதத்தினாராயினும் முஸ்லிம்களே. அதை நிராகரிப்பவர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராயிருப்பினும் முஸ்லிம்கள் அல்லர்!” என்று எழுதலாம். அப்படி சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
December 30, 2008 at 2:06 மு.பகல்
இவர்களுக்கெல்லாம் உறைப்பது போல் அவங்க ஆளே சொல்லுரதைக் கேட்கவும்
http://www.sishri.org/debate/ragavaraj.mp3
ராகவராஜ் ஆய்வாளர் ப்ரவாஹன் கட்டுரை மீதான விவாத அரங்கத்தில் பேசிய பேச்சு (30/8/2008 காஞ்சிபுரம்)
December 30, 2008 at 7:28 பிற்பகல்
// சாதீயம்தான் பார்ப்பனியம். அதை ஏற்றுக் கொண்டவர்கள் எந்த சாதியாயினும் பார்ப்பனர்களே. அதை நிராகரிப்பவர்கள் பார்ப்பன சாதியை சேர்ந்தவராயிருப்பினும் பார்பனர் அல்லர்! //
பார்ப்னியம் என்ற சொல் என்னுடைய கற்பனையிலிருந்து உதித்த்து அல்ல ஆண்மீகவாதிகள், அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள சொல். குறிப்பான அர்த்தம் உடைய சொல். பூவை பூவென்றும் சொல்ல்லாம் புஷ்பம் என்றும் சொல்ல்லாம் அதுபோல சிலர் சாதிய்ம் என சொல்ல்லாம் technically correct
term மாக பார்ப்னீயம் என்றும் சொல்ல்லாம்.
டோன்டுவுக்கு மட்டுமல்ல பார்ப்பானை பார்ப்பான் என்று சொல்வதில் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பார்பானை இழிவு படுத்த பார்ப்னியம் என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அது என் நோக்கமும் இல்லை.
உங்களை புண்படுத்துவதற்காக பார்பனியம் என்று சொல்வதாக கருதுவது தவறு. பார்பனியத்தை பற்றி புரிந்து கொள்வதற்கு இந்து மதம் மற்றும் இந்து மத்ததிலுள்ள சாதிகளை குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்…
அதையும் செய்வோம்!
//தீவிரவாதம்தான் இஸ்லாம். தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எந்த மதத்தினாராயினும் முஸ்லிம்களே. அதை நிராகரிப்பவர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராயிருப்பினும் முஸ்லிம்கள் அல்லர்!” என்று எழுதலாம்.//
இதில் பலவந்தமாக இசுலாத்தை கொண்டு வந்து நுழைப்பது ஏன்? பார்பனீயத்தை பற்றி பேசும்போது சம்மந்தமே இல்லாமல் இசுலாத்தை தீவிரவாதம் என்று நிறுவ முயற்சிப்பது ஏன்?
உங்கள் நோக்கம் இசுலாமியத்தை அவதூறு செய்வது என்றால் சுற்றி வளைத்து மூக்கை தொடுவானேன்.
December 30, 2008 at 7:31 பிற்பகல்
//இவர்களுக்கெல்லாம் உறைப்பது போல் அவங்க ஆளே சொல்லுரதைக் கேட்கவும்//
சுட்டிக்கு நன்றி முரளி…
நீங்க அத முழுசா கேட்டீங்களா?
கம்யூனிஸ் தலைவர்கள் பேர் சொன்ன உடனே எங்காளுன்னு முடிவு செஞ்சுடீங்களா?
பேசுனது ‘எங்க’ ஆளு இல்ல ஆனா
பேசுன விசயம் நிச்சயமா உங்களுக்கு சாதகமா இல்ல!!!!!!!!!
December 30, 2008 at 7:57 பிற்பகல்
அரை டிக்கெட்,
பார்ப்பனீயம் என்ற சொல் ஆன்மீகவாதிகள், அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ள சொல் என்று சொல்லி இருக்கிறீர்கள். எந்த ஆன்மீகவாதி? எந்த அறிஞர்? பெரியாரா? கலைஞரா? வீரமணியா? இவர்களின் பிராமண வெறுப்பு ஊரறிந்த விஷயம்.
சரி அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ள சொல்லாகவே இருக்கட்டும் – பறையன் என்பதும் ஒரு காலத்தில் எல்லாரும் ஏற்றுக்கொண்ட சொல்தான். ஹரிஜன் என்பதும் அப்படித்தான். அதை தலித் என்று மாற்றுவானேன்? நீங்கள் புண்படுத்தும் நோக்கத்தில் சொன்னீர்களா இல்லையா என்பது பிரச்சினை அல்ல – புண்படுகிறதா இல்லையா என்பதுதான் பிரச்சினை. எனக்கு புண்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டால் நான் பறையன் என்று சொல்லலாமா? இதில் பார்ப்பனீயம் என்பது “technically correct” என்று வேறு சொல்கிறீர்கள். எப்படி? எந்த டெக்னிக்?
நீங்கள் பார்ப்பனருக்கு புது defintion கொடுக்கவில்லையா? // சாதீயம்தான் பார்ப்பனியம். அதை ஏற்றுக் கொண்டவர்கள் எந்த சாதியாயினும் பார்ப்பனர்களே. அதை நிராகரிப்பவர்கள் பார்ப்பன சாதியை சேர்ந்தவராயிருப்பினும் பார்பனர் அல்லர்! // இதுதான் பார்ப்பனருக்கு சமூகத்தில் உள்ள definitionஆ? இதில் நான் இஸ்லாமியர்களை இழுக்கவில்லை – உங்கள் definition பல விதங்களில் (அதே மாதிரி பைத்தியக்காரத்தனமாக) உபயோகப்படுத்தலாம் என்று சுட்டிக் காட்டுகிறேன். இஸ்லாமியர்கள் பற்றி அந்த definitionஐ படித்து உங்களுக்கு நான் அவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கிறேன் என்று தோன்றுகிறது. அதே போல் உங்கள் definitionஆல் எல்லா பார்ப்பனர்களையும் ஜாதி வைத்து உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் என்று நினைக்க சாத்தியம் இருக்கிறது என்று தோன்றவில்லை – இது உங்களுக்கே விசித்திரமாக இல்லையா?
இதே மாதிரி போஸ்டிலும் எழுதி இருக்கிறேன். அதை படித்து ஒன்றும் தவறாக தோன்றாத உங்களுக்கு இதை படித்ததும் நான் இஸ்லாமியர்களை பழிக்கிறேன் என்று தோன்றுவது அதிசயம்தான்.
December 30, 2008 at 8:44 பிற்பகல்
//பேசுனது ‘எங்க’ ஆளு இல்ல//
ரொம்ப சரி. அவர் உங்க ஆளில்ல தான் ஏனென்றால் அவர் பகுத்து அறிய வேண்டும் என்கிறார்.
மற்றபடி ராகவராஜை உங்க ஆளுங்கனு சொன்னது லெனின் சொல்லையாவது நீங்க கேப்பீங்களோ என்ற தப்புக் கணக்கால்!
//ஆனா பேசுன விசயம் நிச்சயமா உங்களுக்கு சாதகமா இல்ல!!!!!!!!!//
இணையத்தில், இந்த மாதிரியான தவறான அனுமானம் தான் உங்களைப் போன்றோரினால் உண்மையான பகுத்தறிய விரும்புவோருக்கு ஏற்படும் சாபக்கேடு. இதையேத் தான் ராகவராஜும் சொல்கிறார். பகுத்தறிவாதி என்று அறிவித்தால் தமிழர்கள் எப்படி நம்மை நாத்தீகர்கள் என்று முத்திரைக் குத்துகிறார்கள், அதே போல நீங்களெல்லாம் எங்களைப் போன்றோரை ஆர்.எஸ்.எஸ் என்று சொல்வது சரியன்று.
இவர்களது அனுமானங்கள் இத்துடன் நிற்பதில்லை. மேலும் பல அனுமானங்கள் – மக்களின் பொது புத்திய குறைத்து மதிப்பிட வேண்டியது. ஏதோ இவங்கதான் இணைத்திலியே அதி புத்திசாலிங்கனு காட்டிக்கிட்ட வேண்டியது. இல்ல வெச்சு எல்லா பக்கமும் இறுக்கினா திட்ட வேண்டியது. அப்பா, உங்க பகுத்தறிவுகள கண்டா மெய் சிலிர்க்கிறது.
இதுல பலிகடா உண்மை.
ஆளவுடுங்கப்பா…ஒன் மோர் இவங்க மட்டும் தான் கேள்வி கேப்பாங்க , பதில் நாம் தான் பக்கம் பக்கமா சொல்லனும்!
பெரியாரை கோயில் கட்டி உர்ச்சவ மூர்த்தியாக வைத்திருக்கும் திராவிட கட்சியின் “பகுத்தறிவை” வெட்டி விளாசுகிறார் ப்ரவாஹரன், நேரம் கிடைத்தால் படிக்கவும்:
http://sishri.org/manmozhi1.html
அர டிக்கெட்டா இருந்தாலும் முழு டிக்கெட் போல கொள்கைய வெளியிடச் சொல்லி கேட்டாச்சே, பார்ப்போம். அதுக்கு அப்புறம் கச்சேரி இருக்கு. பல தரப்பினரும் இந்த கொள்கை வெளியிடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!
சற்று சம்மந்தமில்லாம
அர டிக்கெட் – விஜய் , ஜெகன் , ஏழரை , மாப்பி என்பதை விட அர டிக்கெட் என்ற பெயர் நல்லா இருக்கு. ஆர்.வி. தான் இந்த பெயர்களின் பின் உள்ள மர்மங்களை வெளிபடுத்த முடியும்.
December 31, 2008 at 12:12 பிற்பகல்
எதக்கேட்டாலும் பார்ப்பனீயம் பாட்டு பாடரானுங்க!
இவனுங்க தலையெல்லாம் இந்த தீவிரவாதி குண்டுகளால் வெடிக்கும் போது தான் புத்தி வரும் என்று நினைக்கிறேன்.
December 31, 2008 at 12:35 பிற்பகல்
RV -
The previous comment is not by me. Is it possible to publish the IP address of the previous comment, I would like to take it up with WordPress. I would appreciate if you could ban that IP, but its upto you.
Thanks!
December 31, 2008 at 12:59 பிற்பகல்
I trust you Murali….!
Vinavu has also declared such incidents on their blog…Something fishy’s happenin!!!!!
December 31, 2008 at 1:00 பிற்பகல்
உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்… இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!
குறிப்பு :
இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல… எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!
நன்றி: பாரி அரசு
December 31, 2008 at 4:53 பிற்பகல்
பாரி அரசு என்பவருக்கு நன்றி தெரிவித்து மீண்டும் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று சொல்லி இருந்தீர்கள். ஒரு வேலை பாரி அரசுதான் நீங்கள் சொன்ன அறிஞரோ? பார்ப்பனீயம் என்றால் என்ன அர்த்தம் என்பது நன்றாகவே புரிகிறது, இதற்கு முன்னாலும் புரிந்தது. மீண்டும் ஒரு முறை அதையே ஏன் சொல்லி இருக்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை. நான் சொன்ன எந்த கருத்துக்கும் இதில் பதில் இல்லையே? சுருக்கமாக இன்னும் ஒரு முறை:
ஒரு குழுவுக்கு பார்ப்பனர் என்று பெயர், ஒரு கோட்பாட்டுக்கு பார்ப்பனீயம் என்று பெயர் வைத்தால் அந்த குழு அந்த கோட்பாட்டை கடைப்பிடிக்கிறது என்று பொருள். என்னை பார்ப்பனர் என்று அழைப்பதை பற்றி எனக்கு கருத்து ஒன்றுமில்லை. என்னை பார்ப்பனர் என்று அழைக்கும்போது இந்த கோட்பாட்டை பார்ப்பனீயம் என்று அழைப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இது என்னை அவதூறுபடுத்தும் செயல். இந்த சொல்லாட்சி தவறானாது. இதை நீங்கள், பாரி அரசு, மற்ற ஆன்மீகவாதிகள், அறிஞர்கள், யாராயிருந்தாலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
December 31, 2008 at 1:04 பிற்பகல்
//இணையத்தில், இந்த மாதிரியான தவறான அனுமானம் தான் உங்களைப் போன்றோரினால் உண்மையான பகுத்தறிய விரும்புவோருக்கு ஏற்படும் சாபக்கேடு.//
அது சரி நீங்க மட்டும் அவங்க ஆளு அப்படின்னு சொன்னா சரி நான் சொன்னா தப்பா
why this hypocrisy????
December 31, 2008 at 1:08 பிற்பகல்
RV இந்திய சாதிகளின் நிலை என்ற உங்கள் பதிவை படிந்த பின்னர் எனக்கு ஏதோ நெருடலாய் இருக்கிறது…உங்கள் நோக்கம் என்ன என்பதை விளக்குவீற்களா…
நீங்கள் சாதிக்கெதிராக போராட விரும்புகறீர்களா.
December 31, 2008 at 5:00 பிற்பகல்
// RV இந்திய சாதிகளின் நிலை என்ற உங்கள் பதிவை படிந்த பின்னர் எனக்கு ஏதோ நெருடலாய் இருக்கிறது…உங்கள் நோக்கம் என்ன என்பதை விளக்குவீற்களா…
நீங்கள் சாதிக்கெதிராக போராட விரும்புகறீர்களா.//
போராட்டம் எல்லாம் பெரிய வார்த்தை. நான் ஜாதியை எதிர்க்கிறேன், அவ்வளவுதான்.
December 31, 2008 at 3:44 பிற்பகல்
இந்த பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டாம்;
அன்புள்ள ஆர்.வி.
முரளியும் நானும் பல கருத்துகளில் முரண்படுகிறோம் அதனாலேயே அவர் என்னை எதிரியாய் பார்கின்றார் போலும். அதனால்தான் என் மீது பழி சுமத்துகிறார்…
அவர் பெயரில நான் பின்னூட்டமிட வேண்டிய அவசியம் எனக்கில்லை..நான் படிப்பது சில தளங்களை மட்டுமே அங்கெல்லாம் எனது கூகிள் ஐடியில் தான் பின்னூட்டம் இடுகிறேன்.
இங்கே முரளி பெயரில் வெளிவந்திருக்கும் பின்னூட்டம் கூட முரளி, வீரன் தளத்தில் எழுதியது தான். அதை நான் வினவு தளத்தில் அம்பலப்படுத்தினேன்.அதை முரளியும் ஏற்றுக்கொண்டார். அப்படி இருக்கும் போது இங்கு மட்டும் நான் ஏன் அவர் பெயரில் எழுத வேண்டும்.
நாமெல்லாம் இந்த தமிழ் பிளாக் உலகத்திற்கு புதியவர்கள், அதனால் இங்கு நிலவும் பதிவரசியலிலிருந்து தப்ப முடியுமா என்ன.
ஏதாவது ஒரு விவாத்ததை இது மோல சிதைப்பதற்கென்றே பலர் இனையத்தில் அலைகின்றனர் அதற்கு பலியானால் தனிநபர் தாக்குதல் தீவிரமடைந்துவிடும் மன உளைச்சலே மிஞ்சும். இதை நீங்கள் உங்கள் தளத்தில் அனுமதிக்க்கூடாது.
அதனால் இந்த பதிவுக்கு சம்மந்தமேயில்லாத
22 கடைசி பாரா, 23,24,25, 27, 30, 31 ஆகிய பின்னூட்டங்களை நீக்கிவிடுங்கள்.
நன்றி
December 31, 2008 at 4:16 பிற்பகல்
ஆர்.வீ -
நீங்க தான் உண்மைய உடைக்க முடியும். நீங்க எனக்கு கமண்ட் நம்பர் 23ரின் ஐ.பி. முகவரியைத் தருமாரு கேட்டுக் கொள்கிறேன்.
ஜகன் என்ற பெயரில் வந்த விஜய் என்ற போலியை அம்பலப் படுத்தியதும் உங்களுக்குத் தெரியும். அந்த ஐ.பி ஆஸ்திரேலியாவிலிருந்து வருகின்றன. அம்பலப்படுத்தியதும் அவர்கள் பின்னூட்டம் இடுவதை நிறுத்திவிட்டனர். ஆனால் திடீர் என்று அர டிக்கேட் இங்கு வந்து நமக்கு அறிவுரை கூறுகிறார், தனி நபர் தாக்குதல் பத்தி!
அதே போல் இந்த 23ஆம் நம்பர் பின்னூட்டம் எங்கிருந்து வருகிறது என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
***
வாதத்தை எதையுமே புரிந்து கொள்ளாமால் சும்மா கும்மி அடிக்கும் போலிகளுக்கு நான் பதில் சொல்வதை விட அவர்களை தோலிருத்துக் காட்டுவதில் எந்த தவறுமில்லை.
இது சும்மா படிக்க வரபவர்களுக்கு இவர்களது கருத்துக்களில் உள்ள ’நேர்மையை’ புரிந்து கொள்ளவும் உதவும்.
***
அர டிக்கெட் !
அம்பலப் படுத்தும் அளவுக்கு நான் எங்கு போய் ஒளிந்து கொண்டேன். வெர்ட்பெரிஸில் என் தளம் உள்ளது. அதில் என் புகைப்படம் உள்ளது. அது மட்டுமல்ல அர டிக்கெட் ! சொல்லும் வினவில் அம்பலப்படுத்திய கருத்தை அதே தளத்திலும் நானே பதிந்துள்ளேன்.
December 31, 2008 at 4:41 பிற்பகல்
கமெண்ட் # 23 என்ற IP அட்ரசிலிருந்து வந்திருக்கிறது. அந்த IP அட்ரசிலிருந்து வந்த ஒரே கமெண்ட் இதுதான். முரளி, அரை டிக்கெட் வேறு IP அட்ரஸ்களிலிருந்துதான் எழுதி இருக்கிறார். அவர் மீது எனக்கு சந்தகம் இல்லை. நீங்களும் அவருக்கு benefit of doubt ஆவது கொடுக்கலாம். IP அட்ரசை எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியாது.
விஜய், ஜகன் பற்றி புரிகிறது. மாப்பி, ஏழரை யார்? அரை டிக்கெட் பற்றி என்ன மர்மம்?
போலி முரளி, ஏன் இந்த தீசல் புத்தி? முரளிக்கும், அரை டிக்கெட்டுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன – அதை ஒரு சண்டையாக ஏற்றி விடுவதில் என்ன ஒரு அல்பத்தனமான சந்தோசம்?
December 31, 2008 at 5:08 பிற்பகல்
ஆர்.வி-
116.240.0.0 – 116.240.255.255 என்ற ஐ.பி எண்ணகளில் அடங்குமா 23# கமண்ட். நீங்கள் போலியின் ஐ.பியை வெளியிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
எழரை என்ற பெயரில் வீரனின் (www.veeran.co.cc) பதிவில் அரடிக்கெட் எனக்கு மிக நாகரீகமாக பதில் எழுதியிருந்தார். மாப்பி என்பது வேறிடத்தில் அர டிக்கெட் பயன்படுத்தும் பெயர்.
இந்நிலையில் அர டிக்கெட் மீது benefit of doubt என்னால் கொடுக்க முடியவில்லை.
***
ஆர்.வீ -
பார்ப்பனீயத்திற்கு வருவோம். அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால். நாம் சொல்வது நீ பிடித்தது முயலே இல்லை என்று. இதெல்லாம் ஒரு பதிவில் விளக்கிவிட இயலாது.
December 31, 2008 at 5:53 பிற்பகல்
உண்மையில் பாரி அரசு யாரென்றே தெறியாது…ஆனால் இதுவறை நான் படித்தவரையில் அவர் எழுதிய இந்த விளக்கம் போல செறிவானதாக வேறேதும் இல்லை…
//என்னை பார்ப்பனர் என்று அழைக்கும்போது இந்த கோட்பாட்டை பார்ப்பனீயம் என்று அழைப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.//
பார்ப்பனியம் அல்லது Brahminism ஒரு த்ததுவம்..
பார்ப்னியம் என்று குறிப்பிடும் போது நான் Brahminical Hinduism என்பதை குறிப்பிடுகிறேன்
Hindu Brahmin caste பற்றியல்ல.
நீங்கள் எதிர்க்கும் சாதி ஒளிந்திருப்பது அங்குதான். இரண்டுக்கும் பெயர் ஒற்றுமை இருப்பதால் அதை அப்படி கூப்பிடக்கூடாது என்றால் என்ன செய்வது.
நீங்கள் வேண்டுமானால் இணையத்தில் என்று தேடிப்பாருங்கள்.
உங்கள் உதவிக்கு ஒன்று
http://ddkosambi.blogspot.com/
இதில் அவர் மத்ததை பற்றி எழுதியிருப்பதை படியுங்கள்.
//இதை நீங்கள், பாரி அரசு, மற்ற ஆன்மீகவாதிகள், அறிஞர்கள், யாராயிருந்தாலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.//
த்ததுவங்களின் பெயரை மாற்ற நாம் யார்.
சமனம், பௌத்தம், சீக்கியம் etc. இதன் பெயரையெல்லாம் எப்படி மாற்ற முடியாதோ அது போல இதையும் மாற்ற முடியாது என கருதுகிறேன்.
பி.கு. இதை பார்பனீயம் என்று சொல்லக்கூடாது பிராமணியம் என்று சொல்ல வேண்டும் என்றும் ஒரு கருத்து உண்டு.
December 31, 2008 at 5:54 பிற்பகல்
Must have been a copy-paste error – 66.90.73.125 is the IP address for the duplicate Murali.
ஜனவரி 1, 2009 at 12:50 மு.பகல்
அரை டிக்கெட்,
நீங்களும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்; பார்ப்பனீயத்துக்கு உங்கள் defintion, பிறகு பாரி அரசுவின் defintion, இப்போது கோசாம்பியின் defintionஐ பார்க்க சொல்கிறீர்கள். நானும் திருப்பி திருப்பி அதையேதான் சொல்கிறேன் – யார் defintion ஆக இருந்தால் எனக்கென்ன, இந்த பேர் சரி இல்லை என்றுதான் போஸ்டில் சொன்னேன், பல மறுமொழிகளில் சொன்னேன். எத்தனை முறை இதை நான் சொல்வது? நீங்கள் அடுத்த முறை இதோ பார் மாக்ஸ் முல்லர் இதை எப்படி வரையறுத்திருக்கிறார் என்று சொல்லப் போகிறீர்களா? அலுப்பாய் இருக்கிறது.
சரி உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கிறேன்; உங்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்கிறேன்.
1. பார்ப்பனீயம் என்ற வார்த்தையை etymological, philological senseஇல் ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? எங்கிருந்து இந்த வார்த்தை வந்தது? பார்ப்பனர் என்ற வார்த்தைக்கும், பார்ப்பனீயம் என்ற வார்த்தைக்கும் ஒரே மூலச்சொல்தானா இல்லை வேறு வேறா? ஒரே மூலச்சொல்தான் என்று நான் சொல்கிறேன். அதனால் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை இந்த கோட்பாட்டுக்கு – இல்லை இல்லை தத்துவத்துக்கு – உபயோகிப்பது பார்ப்பனர் ஜாதியில் பிறந்த எல்லாரையும் அவதூறு செய்வதுதான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
2. பறையன் என்பது தூய தமிழ் சொல். பல நூறாண்டுகளாக தமிழகத்தில் பேசப்பட்டது. இதை இப்போது சொல்வது சட்டப்படி குற்றம். உபயோகத்தில் இருக்கும் சொல்லை மாற்ற நாம் யார்? இந்த அரசாங்கம் யார்? என்று ஒருவரும் சொல்லவில்லை, நீங்கள் உட்பட. கடந்த பத்து இருபது ஆண்டுகளாகத்தான் தலித் என்ற சொல் புழக்கத்தில் வந்தது. அதற்கு முன் ஹரிஜன் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். தலித் என்று சொல்லக்கூடாது, வார்த்தையை மாறா யாருக்கும் உரிமை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் அதை வெளிப்படையாக சொல்வீர்களா? இல்லை அந்த வார்த்தை ஹரிஜன், பறையன் என்று அழைக்கப்பட்டவர்களை புண்படுத்தியது, மாற்ற வேண்டியதுதான் என்று நினைக்கிறீர்களா?
3. நீங்கள் பார்ப்பனீயம், பிராமணியம் என்றெல்லாம் சொல்வதை நிறுத்திவிட்டு ஜாதீயம், உயர் ஜாதீயம், casteism என்று சொன்னால் கேட்பவர்கள் இது என்ன புது வார்த்தை, இதற்கு என்ன அர்த்தம் என்று குழம்புவார்களா இல்லை சுலபமாக புரிந்து கொள்வார்களா? என்ன நினைக்கிறீர்கள்? சுலபமாக புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தால் பார்ப்பனீயம் என்ற வார்த்தையை கைவிட உங்களுக்கு தயக்கம் உண்டா?
உங்கள் கேள்விக்கு பதில்.
// இரண்டுக்கும் பெயர் ஒற்றுமை இருப்பதால் அதை அப்படி கூப்பிடக்கூடாது என்றால் என்ன செய்வது. //
நான் சொல்வது சரி என்று பட்டால்; அடுத்தவர்களை தேவை இல்லாமல் புண்படுத்துவது தவறு என்று தோன்றினால்: நீங்கள் இவற்றை செய்யலாம்.
1. பார்ப்பனீயம் என்ற சொல்லாட்சி தவறானது என்று நீங்களும் உங்கள் ப்ளாகில், மறு மொழிகளில் எடுத்து சொல்லலாம்.
2. உலகத்தை திருத்துவது கஷ்டம் என்று நினைத்தால், குறைந்த பட்சம் நீங்கள் பார்ப்பனீயம் என்று சொல்வதை நிறுத்திவிட்டு ஜாதீயம், உயர் ஜாதீயம், என்றெல்லாம் சொல்லலாம்.
ஜனவரி 1, 2009 at 5:01 பிற்பகல்
நான் கோசம்பியின் டெபினிஷனை படிப்பதற்காக சுட்டியளிக்கவில்லை…!!!
இனியும் நாம் இத்தலைப்பில் விவாதிக்க வேண்டுமானால் அதற்கு நாம் இந்திய த்ததுவ மரபை தொட்டுச்செல்ல வேண்டும் அதற்கு ஒரு ஒபனிங்…
ஜனவரி 2, 2009 at 5:01 மு.பகல்
அரை டிக்கெட்,
எதை பற்றி விவாதம் என்பதே உங்களுக்கும் எனக்கும் இன்னும் ஒத்து வரவில்லையே? பிறப்பை வைத்து உயர்வு தாழ்வு என்று ஒரு தத்துவம் இருக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு எதுவும் இல்லை. அப்படி வேறுபாடு இல்லாதபோது இந்திய தத்துவ மரபை பற்றி என்ன விவாதம் என்று எனக்கு தெரியவில்லை. இந்த தத்துவம் என்ன, இந்த கோட்பாடு சரியா தவறா என்றெல்லாம் பேச வேண்டும் என்றால் இந்திய தத்துவ மரபை தொட்டு சொல்ல வேண்டியதுதான். அப்படி இல்லாதபோது அலுப்புதான் வருகிறது. இந்த தத்துவத்தை என்ன பேர் வைத்து அழைப்பது என்பது பற்றிதானே விவாதம்?
முரளி நான் மதிக்கும் பதிவர்களில் ஒருவர். அவரது மறுமொழிகளை அவர் சொன்னால் ஒழிய எடுப்பது எனக்கு சரியாக படவில்லை. அவரது பதிவுகளை எடுக்காமல் உங்கள் பதிவுகளை மட்டும் எடுப்பதும் சரியாக படவில்லை. இதை பற்றி உங்களுக்கும் மெயில் எழுதி இருந்தேன்.
ஜனவரி 1, 2009 at 5:02 பிற்பகல்
எப்போது கமென்டுகள் நீக்கப்படும்…!!!???
ஜனவரி 2, 2009 at 6:29 மு.பகல்
ஆர்வி
நான் அன்றே உங்களுக்கு மெயிலுக்கு பதில் அளித்தேன்..இன்றும் உங்களுக்கு மெயில் எழுதியிருக்கிறேன்.
ஜனவரி 2, 2009 at 2:51 பிற்பகல்
RV -
About comment #23:
The IP address is from a drone server named FDCSERVER.NET…from Chicago. I’m not sure what a DRONE server is but pretty sure it is coming from an Internet Server Provider…
I guess now I will give the benefit of doubt in favor of அர டிக்கெட்!
Whoever that அபிஷ்டு can scold me directly instead using my id, I guess. At the least have the guts to give your genuine feelings, I never take comments as personal.
ஜனவரி 2, 2009 at 2:58 பிற்பகல்
அர டிக்கெட் -
மிஸ்டர் கிரிடிக் என்பது பிளாக்ஸ்பாட் சென்று ஓப்பன் ஐ.டி விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது வந்து விடுகிறது. அதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
கமெண்ட் 23 போலி என்பதற்கு அந்த கமண்ட அருகே இருக்கும் இமேஜைப் பார்க்கவும். அதில் என்னுடைய லோகோ இல்லை.
***
பார்ப்பனீயம் தவறான சொல்லாட்சி மட்டுமல்ல. அது தமிழக வேளாளர்களால் திட்டமிட்டு செய்யபடும் சதி என்பதற்கு ப்ரவாஹரனின் சுட்டிகளை கொடுத்துள்ளேன். http://www.sishri.org-ல் மேலும் இரண்டு ஒலிப்பதிவுகள் உள்ளன, அதையும் கேட்கவும்.
ஜனவரி 3, 2009 at 4:02 பிற்பகல்
முரளி,
அரை டிக்கெட்டும் நீங்கள் அந்த கமெண்டை எழுதவில்லை என்று சொன்னதும் உங்களுக்கு ஆதரவாகத்தான் பேசினார்! இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்கள். என்னுடைய கட் பேஸ்ட் தவறும் குழப்பத்தை கொஞ்சம் அதிகரித்துவிட்டது.
அரை டிக்கெட், முரளி நான் பல காலமாக மதிக்கும் பதிவர்களில் ஒருவர். உங்கள் மறுமொழிகளையும் இப்போதெல்லாம் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நல்ல பதிவர்களுக்குள் சிறு மனஸ்தாபம், இதை இத்தோடு விட்டுவிடுவோமே!
ஜனவரி 4, 2009 at 6:11 பிற்பகல்
ஆர்வி மின்னஞல் பார்தீர்களா?
ஜனவரி 6, 2009 at 4:58 பிற்பகல்
You are way different from some brahmin bloggers. For e.g., dondu who claims he is proud of being a brahmin. This is different from defending against the attack on brahmins. I feel you are falling in the second group of defending against unnecessary attack on the brahmins.
Hats off to you for keeping your cool in answering others.My personal question is ” are you really this cool or you supress your emotions when answering questions?”
I really concur with you when u say what is the need to call “parpaniyum” when talking about high caste atrocities?
one thing i dont agree is you are saying that TN has less caste bias than other states. If you do a statistics on the number of people killed in caste conflicts, i think TN might come up within the top 5. The main reason is all the DK,DMK,ADMK leaders are cowards and they cannot question the real perpeterators of atrocities in TN.
May be the atrocities caused by brahmins in TN will be comparitively negligible with the atrocities comitted by brahmins of other states, other than that i dont think TN is comparitively milder than other states in terms of caste conflicts.
ஜனவரி 6, 2009 at 6:58 பிற்பகல்
Kapilavastu,
Thanks for your kind comments. I am glad that you agree that “paarppaneeyam” in an unnecessary provacation.
My comments on casteism on other states is based on my own personal experiences and talking to friends from other states. My impressions are 15 years old – things may have changed significantly now. I also feel that caste feelings have increased in TN in the last few years, after the rise of PMK. I wrote a post called “Inraiya thamizhakatthil jaathi” about that as well.
// are you really this cool or you supress your emotions when answering questions? //
If I say I am really this cool, are you going to ask me “are you telling the truth or are you kidding?”
I don’t beleive I have been exceptionally cool – I have lashed out at some comments. In general, the feedback has been in pretty decent language – arai ticket, su. siva, dondu, bmurali80, vinavu and several others should take the credit for keeping cool. Some comments by su. siva & vinavu are exemplary in dealing with differences of opinion. arai ticket hasn’t lost his cool despite constant criticism of his views, so hats off to him!
ஜனவரி 21, 2009 at 12:05 பிற்பகல்
RV,
I accept your views on this issus completely. I do not agree with Kapilavastu, I guess Dondu sir’s approach is little different (may be far agressive.
ஜனவரி 21, 2009 at 12:06 பிற்பகல்
//may be far agressive.
Read “May be its far aggressive that yours”
பெப்ரவரி 23, 2009 at 5:12 பிற்பகல்
அறை டிக்கெட்,
நீங்கள் உங்களுக்கும் முரளிக்கும் நடந்த சில “கருத்து” பரிமாற்றங்களை நீக்கி விடும்படி பல முறை கேட்டுக் கொண்டீர்கள். இன்னும் நீக்குவது சரிதானா என்று எனக்கு சில தயக்கங்கள் இருந்தாலும், எனக்கு சம்பந்தம் இல்லாததாக தெரிந்த சில மறுமொழிகளை நீக்கி இருக்கிறேன். பல நாட்கள் ஆகி விட்டதால் தேடி கண்டுபிடிப்பதுதான் சிரமமாக இருந்தது. (பல நாட்கள் ஆனது யார் தவறு என்று சிரிக்க வேண்டாம்.
)
பெப்ரவரி 28, 2009 at 7:43 மு.பகல்
தங்கள் பதிவினையும் அதன் பின்னூட்டங்களையும் இன்று தான் படிக்க முடிந்தது.
மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும், கனிவுடனும் பதியப்பட்ட பதிவும். பின்னூட்டங்கள் காரமாக இருந்தாலும், சரியான பதிலடியாகத் திகழ்கின்றன.
இந்த hate crimeஐத் த்டுப்பதற்கான சட்டம் ஏதும் இருக்கிறதா? அமெரிக்காவில் இதற்கு மிகக் கடுமையான தண்டனை உண்டு என்று கேள்விப்படுகிறேன். இதைப் பற்றி விபரம் அறிந்தவர்கள் எழுதினால் பயன் உண்டு.
அணிமையில் சுப்ரீம் கோர்ட்டில் பதிவுகளில் வரும் எழுத்துக்கும் பின்னூட்டங்களுக்கும் அந்த அந்தப் பதிவாளர்களே முழுப்பொறுப்பு என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பு இந்த hate mongersக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமா என்பதை பிராம்மண சட்டவல்லுநர்கள் ஆய்வு செய்தால் நன்மை விளையும்.
மார்ச் 1, 2009 at 3:22 மு.பகல்
நன்றி, கிருஷ்ணமூர்த்தி அவர்களே!
இப்படி குறை சொல்லும் கூட்டம் மிக சிறியதுதான். அதை hate crime என்று என்னால் இன்னும் சொல்ல முடியவில்லை. மேலும் நான் கட்டற்ற கருத்து சுதந்திரம் வேண்டும் என்று சொல்லும் கட்சி. இப்படிப்பட்ட தவறான கருத்துகளை பேசியே தீர்க்கலாம் என்பது என் கருத்து.
செப்டம்பர் 1, 2010 at 10:32 மு.பகல்
where do i stand? வரவர பார்ப்பனீயவாதிகள் கூட என்னிடம் சண்டையிடுவதில்லையே! ஆத்திகன் என்றா?
செப்டம்பர் 1, 2010 at 10:36 மு.பகல்
if i post a comment and am eager to know the reactions should i subscribe to the post? that is what a message says in my mail.
செப்டம்பர் 1, 2010 at 10:14 பிற்பகல்
// வரவர பார்ப்பனீயவாதிகள் கூட என்னிடம் சண்டையிடுவதில்லையே! //
ருத்ரன், எப்படி follow up செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. படிப்பவர்கள் யாராவது சொல்லுங்களேன்!
நவம்பர் 1, 2010 at 7:17 மு.பகல்
தமிழ் நாட்டை நடப்பது யார் யார்? திருமாவளவன், கருணாநிதி, வீரமணி, ராமதாஸ், என்கிற வகையறா ‘தமிழர்கள்’ ஆகியவற்றை ‘பச்சோந்தி’ அல்லது ‘வவ்வால்’ என்கிற விலங்கினத்துடன் ஒப்பிடலாம். இந்த ‘தமிழர்க்ள்’ இல்லங்களில் பேசும் மொழி என்ன? தெலுங்கு. இவைகள் சாதி என்கிற கூச்சலை எழுப்பும் ஒரே காரணம். இவர்கள் தமிழற்ற அடையாளத்தை மறைக்கும் வழி இதுவே. தமிழ்நாட்டில் தமிழ் என்கிற பெயர்கொண்ட கட்சிகள் மிக குறைவு. தமிழ் என்கிற பெயர் கொண்டுள்ள ஒன்று இரண்டு கட்சிகள் சாதி கட்சிகள் தான். பெரும்பாலுமானவர் தெலுங்கு தான். கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிக்கு உள்ள மொழி பற்று, மஹாராஷ்டிர மாநிலத்தில் மராட்டி மொழிக்கு உள்ள மொழி பற்று தமிழ் நாட்டில் சற்றும் இல்லை இந்த ‘தமிழ்’ பெயர் கொண்ட அரசியல்வாதி வவ்வால்களுக்கு. இந்த பிராமண எதிர்ப்பு வலைப்பதிவுகள் எல்லாம் தமிழ்நாட்டின் தெலுங்கு கட்சிகளின் கோழை அடியாட்கள் தான். இந்த தெலுங்கு அரசியல்வாதிகள் தமிழ்நாட்டிலிருந்து தமிழை ஒட்டுமொத்தமாக நீக்க திட்டம் தீட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டு CBSE பள்ளிகளில் தொடரும் இந்தி மொழி திணிப்பு, பிராமணர் போன்ற தமிழர்கள் ‘அவர்கள் தமிழர்களே அல்ல’ என்ன பொய் பிரச்சாரம் செய்தல், உ பி, பீஹார் போன்ற இந்தி மாநிலங்களிலிருந்து வரும் குடியேறிகளுக்கு இலவச ரேஷன் கார்டு மோசடி, தமிழ்நாட்டில் தமிழ் பள்ளிகளுக்கு நிதி பறித்தல், அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடுதல், இலங்கை தமிழ் அகதிகளை (வதை) முகாம்களில் சிறை பிடித்தல், இந்தி பேசும் முஸ்லிம், வட இந்திய பூர்வீகம் கொண்டுள்ள சாதிகளுக்கு ‘தமிழர்கள்’ என்கிற பெயரில் இடஒதுக்கீடு தருதல் (TN OBC LIST: http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm), நெய்வேலி பழுப்பு நிலக்கரி, விமானநிலையம் போன்ற ‘மத்திய’ அரசு நிறுவனங்களில் இந்தி பேசுவோர்க்கு இடஒதுக்கீடு தரதல், தமிழை புரக்கணித்தல்…. இந்த துரோகச் செயல்கள் எல்லாம் செய்திகளில் வருவதில்லை. ஏன் என்றால் செய்தி ஊடங்களை நட்த்துவது இந்த துரோக தெலுங்கு அரசியல் கட்சிகள் தான். தமிழ்நாட்டை நடத்தும் தெலுங்கு முதலமைச்சர் மற்றும் தெலுங்கு சாதி கட்சிகள் எல்லாமே தமிழ் இன துரோகிகள்.
நவம்பர் 3, 2010 at 4:49 பிற்பகல்
தெலுங்கு தெலுங்குதான், தாத்தாவும் பாட்டியும் ஆந்திராவிலிருந்து வந்ததால் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் தமிழர்கள் அல்ல என்று சொல்வதை நான் வன்மையாக மறுக்கிறேன்.
December 24, 2010 at 4:12 பிற்பகல்
நீங்கள் தமிழ் தான். தமிழ் என்பது மனதில் தான். அதை ஏற்கிறேன். கருணாநிதி வீரமணி ராமதாசு போன்ற போலி தமிழர்கள் தமிழ் பேசுவோர்களை தமிழ்கள் அல்ல என பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் பூர்வீகம், இல்ல மொழி, முன்னுரிமைகளை ஆராய வேண்டும்.
அக்டோபர் 6, 2011 at 10:18 மு.பகல்
தன்னைப் பகுத்தறிவுப் பகலவன்களாக தோரணை செய்பவர்களின் அநாகரீக வார்த்தைகளே “பார்ப்பனீயம்” போன்றவை.